குதுகலமாகத் தொடங்கி அதிரடியாக நடைப்பெற்று வருகிறது கிரிக்கெட் உலகக்கோப்பை (ICC World Cup 2023). இத்தொடரில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் தற்போது இந்தியாவின் முதலிடம் பரிபோகும் நிலையில் உள்ளது.
இந்த ஆண்டிற்க்கான ஐசிசி உலகக் கோப்பை அக்டோபர் மாதம் 5-ம் தேதி தொடங்கியது. கடந்த 20 நாட்களாக போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டிகள் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும், நீயுசிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளது.
முதல் நான்கு இடத்தில் உள்ள அணிகளுடன் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியில் மேதும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து விளையாடிய நான்குப் போட்டிகளில் ஒன்றை மட்டுமே வென்றுள்ளது. அதேபோல் பாகிஸ்தானும் ஒரு போட்டியில் மட்டுமே வென்று இருக்கிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா உடன் நடைபெற்றப் போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வியை தழுவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்போதைய நிலவரப்படி முதல் நான்கு இடங்களில் உள்ள அணிகள் தான் அரையிறுதியில் சந்திக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இன்னும் 4 போட்டிகள் மட்டுமே ஒவ்வொரு அணிக்கும் மீதம் உள்ள நிலையில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் எவ்வளவு முயன்றாலும் நான்காவது இடத்திற்கு மட்டுமே வர இயலும்.
இந்தியாவின் முதலிடம் என்ன ஆகும்?
நடைப்பெற்று கொண்டிருக்கும் உலகக்கோப்பையில் தரவரிசை புள்ளிப்பட்டியலில் இந்திய அணி (Indian Cricket Team) தான் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் எப்போது வேண்டுமானாலும் அந்த நிலை பறிபோகும் நிலையில் உள்ளது. ஏன் என்றால் இனி 22-ம் தேதி தான் இந்தியாவிற்கு போட்டி உள்ளது. இந்த போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணியை சந்திக்கிறது.
இதற்க்கிடையில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் (SA vs PAK) அணிகள் மோதுகின்றன. இந்தப்போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிப்பெற்றால் இந்தியாவை விட தென்னாப்பிரிக்கா-வின் நெட் ரன் ரேட் அதிகம். எனவே தென்னாப்பிரிக்கா முதல் இடத்திற்க்கும் இந்தியா 2-ம் இடத்திற்க்கு செல்லும். அதுமட்டும் இன்றி ஆக்டோபர் 28-ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் நீயுசிலாந்து (Aus vs Nz) இடையேயான போட்டியில் நீயுசிலாந்து வெற்றிப்பெற்றால் இந்தியா மூன்றாவது இடத்திற்கு செல்லும் நிலை ஏற்ப்படும்.
ஆனால் அக்டோபர் 29-ம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து (IND vs ENG) அணிகளுக்கு போட்டி உள்ளதால் அப்போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெறும் நிலையில் மீண்டும் இந்தியா முதல் இடத்திற்கு சென்றுவிடும்.