HomeசினிமாRIP Daniel Balaji : பொல்லாதவன் படத்தில் நடித்த டேனியல் பாலாஜி மரணம்..!

RIP Daniel Balaji : பொல்லாதவன் படத்தில் நடித்த டேனியல் பாலாஜி மரணம்..!

தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி இன்று (30.30.2024) மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார் (RIP Daniel Balaji). அவருக்கு வயது 48 ஆகும். இவரின் மரணம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாக்களில் வில்லனாக தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் மறக்க முடியாத வில்லன் கதாபாத்திரமாக டேனியல் பாலாஜி (Actor Daniel Balaji) இருந்தார். இவர் முதல் முதலில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு படிப்படியாக சினிமா துறையில் வளர தொடங்கிய இவர் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு, தனுஷ் நடித்த பொல்லாதவன், சூர்யா நடித்த காக்க காக்க மற்றும் விஜய் நடித்த பைரவா, பிகில் போன்ற பல்வேறு படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

Daniel Balaji

இந்நிலையில் நேற்று (29.03.2024) இரவு டேனியல் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உறவினர்கள் அவரை சென்னையில் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நடிகர் டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் (Daniel Balaji Passed Away). திடீர் மாரடைப்பு காரணமாக டேனியல் உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் மரணம் திரைத்துறையினர் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

மேலும் படிக்க : தளபதி 69 படத்தை இயக்கும் இயக்குனர் யார்? வெளியான முக்கிய தகவல்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular