Homeசெய்திகள்Koffee With DD: நிகழ்ச்சியை திடீரென முடித்தது ஏன்? மனம் திறந்த DD..!

Koffee With DD: நிகழ்ச்சியை திடீரென முடித்தது ஏன்? மனம் திறந்த DD..!

வெள்ளித்திரை வெளியாகும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் எவ்வளவு பிரபலமோ அதே அளவுக்கு சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அவ்வளவு பிரபலம். அதிலும் சில வருடங்களுக்கு முன்பு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் Koffee With DD என்னும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி பிரபல தொலைகாட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

மிகவும் பிரபலமாக இருந்த இந்த நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது. அப்போது முதலே இந்த நிகழ்ச்சியை ஏன் முடித்தனர் என்னும் கேள்வி பலரிடம் இருந்து வந்நது. இந்நிலையில் தான் தற்போது இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி (Anchor Divyadarshini) இதற்கான காரணத்தை கூறியுள்ளார். இது பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவி பிரபலம் ஆனதோ இல்லையோ ஆனால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அனார். சிரித்த முகம் மற்றும் எப்போதும் கலகலப்பாக இருப்பது என டிடி செய்யும் அனைத்தும் மக்களை ரசிக்கவைக்கும் விதமாக இருந்தது.

அதிலும் முக்கியமாக எதிரே இருக்கும் பிரபலங்களை டக்கு டக்கு என்று கேள்வி கேட்டு மடக்கி அவர்களின் மனதில் இருக்கும் ரகசியங்களை சொல்ல வைத்து விடுவாரல் டிடி. இதன் காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் தனி பெயர் இருந்தது. இவ்வாறு மிகவும் பிரபலமாக இருந்த தொகுப்பாளர் தான் டிடி. சில வருடங்களுக்கு முன்பு வரை விஜய் டிவியில் ஒளிபரப்பான அதிகபட்சமான நிகழ்ச்சிகளில் இவரை பார்க்க முடியும். ஆனால் தற்போது இவரை அதிக அளவில் பார்க்கமுடிவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று தற்போது அவர் கூறியுள்ளார்.

இது குறித்து Anchor DD கூறுகையில், நம்முடைய உடல்நிலை நன்றாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் நம்மால் அடுத்தடுத்து வேலைகளை பார்க்க முடியும் என்று கூறினார். மேலும் நம்மால் ஒரு காரியம் ஆகிறது என்றால் தான் நம்மை ஒரு இடத்தில் வைத்திருப்பார்கள். ஆனால் நம்மால் முடியவில்லை என்றால் அங்கிருந்து தூக்கி வீசப்படுவோம் என்பதை நான் என் வாழ்க்கையில் தாமதமாக தான் கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் நான் கடந்த பத்து வருடங்களாக மேலாக அதிகமான நேரம் நின்று கொண்டே ஆங்கரிங் செய்து கொண்டிருக்கிறேன். அதிக நேரம் நின்று கொண்டு தான் ஆங்கரிங் செய்ய வேண்டி இருக்கும் என்றும் இதன் காரணமாக கால் வலி அதிகமாகி உள்ளது. எனவே இதற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால் அது பெரிய அளவில் பயனளிக்கவில்லை. இன்று வரையில் தான் கால் வலியுடன் தான் இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Anchor DD

இதன் காரணமாக தான் தற்போது அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் அவர் தொகுத்து வழங்கிய ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் உட்கார்ந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேபோல எல்லா தொகுப்பாளர்களுக்கும் கிடைத்தால் அவர்களுடைய உடல் நிலை பாதுகாக்கப்படும். ஆனால் அதை செய்வதற்கு பலர் தயாராக இல்லை என்றும் தொகுப்பாளருக்கு ஒரு சேர் போடுவதற்கு பலர் யோசிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்த காரணத்தால் நான் சில நிகழ்ச்சிகளை விட்டு வெளியே வர வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது என்று சமீபத்தில் நடைபெற்ற பேட்டி (Anchor Divyadarshini Latest Interview) ஒன்றில் அவர் கண்ணீரோடு பேசி இருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: நாளை தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா..! எந்தெந்த படங்களுக்கு விருது..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular