HomeசினிமாDear VS Romeo Box Office Collection: முதல் நாள் முடிவில் வென்றது யார்?

Dear VS Romeo Box Office Collection: முதல் நாள் முடிவில் வென்றது யார்?

வெள்ளிக்கிழமை என்றாலே அனைத்து திரையரங்குகளிலும் புது படங்கள் வெளியாவது தான் வழக்கம். அதுவும் ஒரே நாளில் இரண்டு மூன்று படங்கள் வெளியானால் அந்த படங்களில் வெற்றி பெற்ற படம் எது என்பதை தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும்.

அந்த வகையில் இந்த வாரம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இரண்டு படங்கள் வெளியாகி உள்ளது. அந்த படங்கள் தான் ஜி.வி. பிரகாஷ், ஜஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்த டியர் படம் மற்றும் விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ படம் ஆகும். இந்த இரண்டு படங்களில் அதிக பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பெற்று வெற்றி பெற்ற படம் எது என்பதை பார்க்கலாம்.

டியர் படம் (Dear Movie)

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் (G. V. Prakash Kumar) நடிப்பில் இந்த வாரதம் வெளியாகி உள்ள படம் தான் டியர் (Dear Movie). நாடாளுமன்னற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் எந்த ஒரு பெரிய படங்களும் வெறியாக வில்லை. இந்த நிலையில் தொடர்ந்து 3 வாரங்களாக ரெபல், கள்வன் அதனை தொடர்ந்து டியர் என தனது படங்களை வெளிவிட்டுவருகிறார் ஜி.வி. பிரகாஷ்.

இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் -வுடன இணைந்து ஜஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், ரோகிணி, இளவரசு மற்றும் பிளாக்‌ஷீப் யூடியூப் புகழ் நந்தினி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியான (Dear Box Office Collection) முதல் நாளில் 50 லட்சத்திற்கும் குறைவான வசூலை தான் பெற்றுள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

G. V. Prakash Kumar Movies

ரோமியோ படம் (Romeo Movie)

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி (Vijay Antony) நடிப்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உள்ள திரைப்படம் ரோமியோ (Romeo Movie). இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், ஷா ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காதல் மற்றும் காமெடி கதைகளத்தை கொண்டுள்ள இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்’ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் பரத் தனசேகர் இசையமைத்துள்ளார். இந்த ரோமியோ திரைப்படம் ரொமான்ஸ் – நகைச்சுவை இணைந்த குடும்ப படமாக வெளியாகி உள்ளது. இந்த படம் ரசிகர்களை கொஞ்சம் சிரிக்க வைத்தாலும் பல நூறு படங்களில் உள்ள கதைக்களத்தை பெற்றுள்ளது என கூறப்படுகிறது.

 Vijay Antony Movies

ஆனால் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி உள்ள இந்த ரோமியோ படம் முதல் நாளில் 1 கோடி ரூபாய் வசூல் உடன் நல்ல (Romeo Box Office Collection) தொடக்கத்தை கொடுத்துள்ளது என கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக தமிழ் திரையரங்குகளில் நல்ல வெற்றி பெற்ற படங்கள் எதுவும் வரவில்லை. மலையாள படங்கள் தான் இப்போதேல்லாம் முதல் நாளில் 7 முதல் 10 கோடி வரை வசூல் பெற்று வந்தன. இந்த நிலையில் 1 கோடி வசூலை கொடுத்த இந்த படம் விஜய் ஆண்டனிக்கு வெற்றிப்படமாக மாற்ற வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த வாரம் வெளியான டியர் மற்றும் ரோமியோ படங்களில் அதிக வசூல் பெற்று வெற்றி பெற்ற படமாகவும் ரோமியோ படம் வந்துள்ளது. டியர் படத்துடன் ஒப்பிடும் போது ரோமியோ படமே அதிக ரசிகர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Siren Movie OTT Release Date: மக்களால் அதிகம் விரும்பப்பட்ட சைரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular