அரசு பேருந்துகளில் மகளிர் அனைவரும் கட்டணமில்லாமல் இலவச பயணம் செய்யலாம் என பல மாநிலங்கள் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பை டெல்லி அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் திருநங்கைகளும் கட்டணமின்றி இலவச பயணம் செய்யலாம் (Free Bus Travel for Transgender) என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆக்டோபர் மாதம் முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டனமின்றி இலவசமாக பயணம் செய்யும் திட்டம் டெல்லியில் (Delhi) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் டெல்லியில் உள்ள ஏழை எளிய பெண்கள் ஏராளமானவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் தான் தமிழகத்திலும் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் (Bus Ticket Free) என முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு அறிவித்தார். அந்த ஆண்டு மே 8 ஆம் தேதி முதல் இந்த திட்டம் அவழுக்கு வந்தது.
டெல்லியில் 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தில் பெண்கள் மட்டுமே இலவசமாக பயணம் செய்ய முடிந்தது. இந்த திட்டத்தில் திருநங்கைகளையும் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த திட்டம் தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“நமது சமூக சூழலில் திருநங்கைகள் (Transgenders) பெரிதும் புறக்கணிக்கப்படுகின்றனர். இது நடக்கக்கூடாது, அவர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் சம உரிமை உண்டு. டெல்லி பேருந்துகளில் திருநங்கைகளுக்கும் இலவசப் பயணம் செய்யலாம் என்று டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட நடைமுறைப்படுத்தப்படும்” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் காரணமாக திருநங்கைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த திட்டம் அவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
हमारे सामाजिक परिवेश में किन्नर समाज की काफ़ी उपेक्षा की जाती है। ऐसा नहीं होना चाहिए, वे भी इंसान हैं और उन्हें भी बराबर के अधिकार हैं। दिल्ली सरकार ने फ़ैसला किया है कि दिल्ली की बसों में अब किन्नर समाज के लिए भी सफ़र एकदम फ़्री होगा। जल्द ही इसे कैबिनेट से पास करके लागू कर… pic.twitter.com/3Wa560gKEk
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 5, 2024