Homeசெய்திகள்Justice For Aarthi: புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு நடந்தது என்ன?

Justice For Aarthi: புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு நடந்தது என்ன?

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. இதுபோன்ற ஒரு கொடுமையான நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொள்ளப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் மற்றும் புதுச்சேரியை உலுக்கியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த சனிக்கிழமை (02.03.2024) அன்று ஒரு சிறுமி காணமல் போனார். இந்த சிறுமி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சோலைநகா் பாடசாலை வீதியைச் சோ்ந்தவா் தான் நாராயணன் என்பவரின் மகள் ஆர்த்தி ஆவார். இவர் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தான் வீட்டின் அருகே விளையாடச் சென்ற ஆர்த்தி மீண்டு வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதட்றம் அடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

எனவே போலீஸார் இந்த புகாரின் (Missing Girl Arthi Case) அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடித்தினர். இதைத்தொடர்ந்து சோலைநகர் பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதில் சிறுமி சோலை நகரில் இருந்து வெளியே செல்லும் காட்சி இடம்பெறவில்லை. எனவே போலீசார் அப்பகுதியை சுற்றி தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் தான் இரண்டு நாட்களுக்கு முன்பு காணமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

அந்த சிறுமியின் உடலானது அவரது வீட்டின் அருகே அம்பேத்கர் என்ற பகுதியில் பாதாள சாக்கடையில் மூட்டையாக கட்டி வீசப்பட்டு இருந்தது. அந்த உடல் போர்வை மற்றும் வேட்டியால் சுற்றி சாக்கடையில் வீசப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அவரது உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் அந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமி கொலை செய்யப்பட்டு (Puducherry girl murder case) வாய்க்காலில் வீசப்பட்டாரா என்றும் விசாரணை நடத்தி வந்தனர்.

Puducherry girl Arthi Case

இந்நிலையில் தான் தற்போது இந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் 59 வயது முதியவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சிறுமியில் கை கால்களை கட்டி வாயை மூடியும் வன்கொடுமை செய்ததால் மூச்சு தினறல் ஏற்பட்டு அந்த சிறுமி இறந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சிறுமிக்கு நிதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வெடித்து வருகிறது. அனைவரும் Justice For Aarthi என்னும் கோஷத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: 3 நாட்களுக்கு முன் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்பு..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular