கடந்த மாதம் லோக் சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் மக்களவை தேர்தலின் முதல் கட்டமாக இன்று (19.04.2024) தமிழகத்தில் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. நம்மில் பலரும் வாக்களித்து இருப்போம். ஆனால் நாம் வாக்களித்து அதன் மூலம் தேர்வு செய்யப்படும் எம்பிக்களின் மாத சம்பளம் எவ்வளவு இருக்கும் என்ற கேள்வி பலரிடமும் ஒரு முறையாவது எழுந்து இருக்கும். ஆனால் பலருக்கு இது குறித்த தகவல் தெரிவது இல்லை. இது குறித்து (Monthly Salary of MP) இப்பதிவில் பாரக்கலாம்.
இந்த வருடம் இந்தியாவில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் இந்த வருடம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 272 எம்பிக்களின் ஆதரவு வேண்டும். மேலும் நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில் லோக்சபா, ராஜ்யசபா என 2 சபைகள் உள்ளன.
இந்த இரண்டு சபைகளில் ராஜ்யசபா எம்பிக்களை எம்எல்ஏக்கள் தேர்வு செய்வர். இவ்வாறு தேர்வு செய்யப்படும் ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். ஆனால் லோக்சபா எம்பிக்கள் மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள் ஆவார். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெற்று அதன் மூலம் தேர்வு செய்யப்படும் எம்பிக்களுக்கு சம்பளம் (MP Monthly salary) மாத அடிப்படையில் வழங்கப்படுகிறது. மேலும் இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. அது மட்டுமன்றி ஏராளமான சலுகைள் மற்றும் அலோவன்ஸ்களும் மாதமாதம் வழங்கப்படுகிறது. அதன்படி மாதந்தோறும் தொகுதி அலோவன்ஸாக ரூ.70 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மேலும் மாதம் தோறும் அலுவலக செலவுக்காக ரூ. 60,000 ஆயிரம் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் சேர்த்து பார்த்தால் எம்பிக்களுக்கு மாதசம்பளமாக (MP Salary Per Month) சுமார் 2.30 லட்சம் வரை கிடைக்கும். இதுமட்டுமின்றி பல விதமான அலோவன்ஸ்களும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் படி மருத்துவ சலுகைகள் மற்றும் பயணசலுகைகள் என பல சலுகைகள் உள்ளது.
இதையும் படியுங்கள்: தஞ்சையில் பிறந்து பாலிவுட் திரையுலகை கலக்கும் இயக்குனர்..! யார் அவர்? |