Homeசினிமாதங்கத்தால் நெய்யப்பட்ட இந்திரஜாவின் கல்யாண புடவை..! விலை எவ்ளோ இருக்கும்..!

தங்கத்தால் நெய்யப்பட்ட இந்திரஜாவின் கல்யாண புடவை..! விலை எவ்ளோ இருக்கும்..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வரும் நடிகர்களில் முக்கியமான ஒருவர் தான் நடிகர் ரோபோ சங்கர். இவர் பல வருடங்களாக திரைத்துறையில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் பல முக்கிய முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார்.

இந்நிலையில் தான் கடந்த (24.03.2024) அன்று மதுரையில் இவரது மகள் இந்திரஜாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த கதாபாத்திரத்தின் மூலம் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த படத்திற்கு பின் சில வருடங்கள் கழித்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளிவந்த விருமன் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகை இந்திரஜாவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

நடிகை இந்திரஜாவிற்கும் அவருடைய தாய் மாமாவிற்கும் மாதங்களுக்கு முன் திருமண நிட்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் தான் தற்போது இவர்கள் இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

நடிகை இந்திரஜாவின் கணவர் கணவர் கார்த்திக் தொடர்வோம் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் அவர் இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். வெகு விமர்சையாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் (Robo Shankar Daughter Indraja wedding) பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

Robo Shankar Daughter Indraja wedding

இந்நிலையில் தான் தற்போது இந்திரஜாவின் திருமண புடவை (Robo Shankar Daughter Indraja wedding saree) பற்றி சமூக வளைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இவரின் திருமண புடவையானது 2 கிராம் தங்கத்தில் நெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தால் நெய்யப்பட்டுள்ள இந்த புடவையின் விலை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: கில்லி படத்தில் விஜய்க்கு பதிலாக நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular