இந்த ஆண்டின் ஐபிஎல் சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் அனைத்து அணிகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த சீசனில் அதிகபட்ச அணிகளில் கேப்டன்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இத்தனை சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் 6 அணிகளின் கேப்டன்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
நடப்பு சீசனில் முதல் முதலாக கேப்டனை மாற்றிய அணி மும்பை அணி தான். இந்த அணியில் பல வருடங்களாக கேப்டன் பதவியில் இருந்த ரோஹித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதில் கடந்த இரண்டு வருடங்களாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தனர். இதன் காரணமாக களமிறங்கிய முதல் சீசனிலே ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவை இழந்து தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில்லை நியமித்ததுள்ளனர்.
இந்த இரண்டு அணிகளையும் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்கள் கேப்டனை மாற்றியது. இந்த அணியின் கேப்டனான ஐடன் மார்கிரமை நீக்கி ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ்-ஐ கேப்டனாக நியமித்தது. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரண்டு அணியும் கடந்த சீசனில் தங்கள் அணியின் கேப்டன்களுக்கு ஏற்பட்ட் காயம் காரணமாக வேறு கேப்டன்களை நியமித்து இருந்தன.
கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிதிஷ் ரானா தலைமையில் விளையாடியது. இந்நிலையில் இந்த சீசனில் முந்தைய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் விளையாட உள்ளது. அதே போல தான் டெல்லி கேபிடல்ஸ் அணியும் கடந்த சீசன் டேவிட் வார்னர் தலைமையில் விளையாடியது. தற்போது தங்கள் அணியின் கேப்டன ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பி விட்டதால் தற்போது அவர் தலைமையில் இந்த சீசனில் விளையாடவுள்ளது.
இதன் பிறகு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் அணியின் கேப்டனை மாற்றியது. இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் 14 ஆண்டு கால கேப்டன் தோனி தனது பதவியில் இருந்து விலகி, ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக தேர்வு செய்து இருக்கிறார்.
ஐபிஎல் 2024 அனைத்து அணிகளின் கேப்டன்கள் (IPL 2024 All Team Captains)
அணிகள் | கேப்டன் |
சென்னை சூப்பர் கிங்ஸ் | ருதுராஜ் கெய்க்வாட் |
மும்பை இந்தியன்ஸ் | ஹர்திக் பாண்டியா |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | பாப் டு ப்லெசீஸ் |
டெல்லி கேபிடல்ஸ் | ரிஷப் பண்ட் |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | பாட் கம்மின்ஸ் |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | ஸ்ரேயாஸ் ஐயர் |
ராஜஸ்தான் ராயல்ஸ் | சஞ்சு சாம்சன் |
குஜராத் டைட்டன்ஸ் | சுப்மன் கில் |
பஞ்சாப் கிங்ஸ் | ஷிகர் தவான் |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் | கே.எல். ராகுல் |
இதையும் படியுங்கள்: CSK vs GT: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்..! அதிரடியாக குறைந்த விலை..! |