இன்னும் சில நாட்களில் இந்த ஆண்டிற்கான IPL தொடர்கள் தொடங்க உள்ளது. இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு தொடர்களில் ஒன்று தான் இந்த Indian Premier League. இந்த தொடருக்கு அதிக அளவிலான ரசிகர்கள் இருக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்த தொடரில் உள்ள அணிகளும் அந்த அணிகளில் உள்ள வீரர்களும் தான்.
இந்த தொடரில் மொத்தமாக 12 அணிகள் விளையாடுகிறது. இவற்றில் மிகவும் பிரபலமான மற்றும் அதிக மக்களால் விரும்பப்படும் அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த 2023-ம் ஆண்டின் வெற்றியாளர்களும் Chennai Super Kings தான். இந்நிலையில் மார்ச் மாதம் 22-ம் தேதி இந்த ஆண்டிற்கான போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டின் முதல் போட்டி கடந்த ஆண்டின் வெற்றியாளர்களாள CSK அணி மற்றும் RCB ஆகிய அணிகளுக்கு இடைய நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் இந்த ஆண்டு விளையாடப்போவது இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் படி கடந்த சீசனில் தனது சிறந்த ஆட்டத்தின் மூலம் பல போட்டிகளில் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவரும், சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவோன் கான்வே (Devon Conway) இந்த சீசனில் விளையாடப்போவது இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அவருக்கு இடது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை முடிந்த பின்பு குறைந்தது 8 வாரங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே கான்வே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: 12 வருடங்களில் முதல் முறையாக ரன் அவுட் ஆன பிரபல வீரர்..! யார் தெரியுமா? |