HomeசினிமாDhanush 51: பிரம்மாண்டமாக உருவாகி வரும் தனுஷின் அடுத்த திரைப்படம்..! புதிய அப்டேட்..!

Dhanush 51: பிரம்மாண்டமாக உருவாகி வரும் தனுஷின் அடுத்த திரைப்படம்..! புதிய அப்டேட்..!

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் தனுஷ். சினிமாவில் சிலருக்கு தான் எல்லா விதமான கதாபாத்திரங்களும் பொருந்தும் பள்ளி மாணவர் முதல் தந்தை கதாபாத்திரம் வரை அதுபோல உள்ள நடிகர்களில் இவரும் ஒருவர். இவருடைய படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே கூறலாம்.

இவருடைய எதார்த்தமான நடிப்புக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்களும் நல்ல கதைகளத்துடன் இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் பெறுகிறது. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கூட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. தற்போது இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தன்னுடைய அடுத்த படத்தில் (Dhanush Next Movie) நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷின் அடுத்த படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு D51 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரு வார காலமாக திருப்பதி மலைப்பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றிற்கு மத்தியில் தான் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

வெளியாகியுள்ள தகவலில் இந்த தனுஷ் 51 (Dhanush 51) படத்தின் வெளிநாட்டு உரிமையை டிரீம் என்டர்டெயின்மென்ட் என்கிற நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படமானது தமிழ், மலையாளம், தெலுங்கு. ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் பிரம்மாண்டமாகவும் பான் இந்தியா படமாகவும் உருவாகி வருகிறது.

Dhanush 51
இதையும் படியுங்கள்: Lover Movie Box Office Collection: இரண்டு நாளில் இத்தனை கோடியா?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular