கிரிக்கெட் என்றாலே நம்மில் பலருக்கு நினைவில் வருபவர் தல தோனி தான். அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளமே தனி என்று தான் கூறவேண்டும். கிரிக்கெட்டை இந்த விளையாட்டுக்காக பார்ப்பவர்களை விட தோனிக்காக பார்ப்பவர்கள் தான் அதிகம். இந்த நிலையில் தான் தற்போது பிரபல நிறுவனம் ஒன்று அவருக்கு ஒரு முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் உலக புகழ்பெற்ற பிரெஞ்சு கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று தான் சிட்ரோன். இந்த நிறுவனம் சமீபத்தில் தங்கள் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக (Citroen Car Company Brand Ambassador) பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரான மஹேந்திர சிங் தோனியை நியமித்து இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் இதற்காக அந்த நிறுவன் அவருக்கு ரூ. 7 கோடியை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதுமட்டுமின்றி வரும் நாட்களில் அவருக்கு சிட்ரோன் நிறுவனத்தின் கார்களும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அது எந்த மாடல் கார் என்பது குறித்த எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை.
அதுமட்டுமின்றி இப்போது உள்ள நிலவரத்தின் படி இந்த சிட்ரோன் நிறுவனம் இதுவரை இந்தியாவில் நான்கு விதமான கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அவை சி3, சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி, சி5 ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகியவை ஆகும். மேலும் இந்த கார்கள் அனைத்தும் ஐசிஇ வாகன மாடல்கள் ஆகும். இதனுடன் இ-சி3 என்னும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலையும் இந்த சிட்ரோன் நிறுவன் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் தான் தற்போது இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக பிரபல கிரிக்கெட் வீரரான தோனி (Cricketer Mahendra Singh Dhoni) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அறிந்த தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்: IPL 2024: வரலாற்று சாதனை படைத்த தோனி..! தல எப்பவுமே மாஸ் தான்..! |