கிரிக்கேட் என்றேளா அனைவருக்கும் பிடித்த விளையாட்டு தான். அதுவும் தற்போது நடைபெறும் ஐபிஎல் (IPL 2024) போட்டிகள் என்றால் சொல்லவா வேண்டும். ஐபிஎல் போட்டியில் விளையாடும் அணிகளில் அதிக ரசிகர்களை பொண்டுல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னால் கேப்டன் தோனி (MS Dhoni) அதிக ரசிகர்களை பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கிரிக்கெட் ரசிகர்கள் அன்புடன் தல என அழைப்பார்கள். இவர் விளையாடும் போட்டியை பார்ப்பதற்காக அதிகமான ரசிகர்கள் வருவார்கள். அந்த அளவிற்கு அதிக ரசிகபட்டாலத்தை பெற்றுள்ளார் தல தோணி (Thala Dhoni).
ஐபிஎல் போட்டிகள் பிரபலமான பிறகு தான் தோணிக்கு தல என பெயர் வந்தது. இதனை பற்றி மனம் திறந்து தோனி பேசி உள்ளார். என்னை சென்னையில் தோனி என யாரும் கூப்பிட மாட்டார்கள். தல என்றே அனைவரும் அழைப்பார்கள். எனக்கு அவர்கள் என்னை தல என அழைப்பதே பிடிக்கின்றது என கூறியுள்ளார்.
மேலும் நாங்கள் எங்கு விளையாடினாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings), ரசிகர்கள் சிறப்பான ஆதரவை அளிக்கிறார்கள் என கூறியுள்ளார் தல தோணி. சிஎஸ்கே ரசிகர்களுக்கு தோனி மேல் உள்ள பிரியம் உள்ளது. இதற்கு ஒரு பெரிய உதாரணம் தான் சில தினங்கள் முன்பாக சென்னையில் நடைபெற்ற சிஎஸ்கே போட்டி. அந்த போட்டியில் கடைசியாக கலம் இறங்கிய தோனி ஸ்டேடியத்திற்குள் வரும் போது ஏற்பட்ட ரசிகர்களின் ஆரவாரம்.