தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவருடைய மகன் தான் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). பல வருடங்களாக திரைதுறை பக்கமே வராமல் இருந்த இவர் திடீரென இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
சில வாரங்களுக்கு முன் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் தான் இப்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இப்படத்திற்காக பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இப்படத்தின் கதாநாயகன் பற்றிய அறிவிப்பு வெளியாகமல் இருந்தது.
இந்நிலையில் தான் தற்போது இந்த படத்தில் வாரிசு நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் படி விஜய் மகன் இயக்கும் (Vijay Son Jason Sanjay) இப்படத்தில் நடிகர் விக்ரம் மகனான துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் மகன் இசையமைக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் மூன்று வாரிசு நட்சத்திரங்கள் இணைந்து இருப்பது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் கதைக்களம் மிகவும் விருவிருப்பானதாக இருக்கிறது என்றும் இதனால் இவர்கள் மூவருக்கும் இப்படம் வெற்றியை தரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: நடிகை ஸ்ரீதேவி விஜயக்குமாரின் கணவரை பார்த்து இருக்கீங்களா..!யார் தெரியுமா? |