தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ரத்னம் திரைப்படம். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அந்த படத்தின் புரோமோஷன் சமீபத்தில் நடைபெற்றது. ரத்னம் படத்தை புரமோட் (Director Hari Rathnam Movie Promotion) செய்யும் வகையில் நடிகர் விஷால் பல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநர் ஹரி ஒரு புறம் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி (Director Hari Youtube Channel Interview) அளித்துக்கொண்டிருந்த ஹரி நடிகர் நயன்தாராவை பற்றி கூறினார். ஹரி இயக்கத்தில் தான் முதன்முதலாக நயன்தாரா ஐயா படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே நயன்தார ராெம்ப கோவகாரியாக தான் இருப்பார். காஸ்ட்யூம்லாம் சரியில்லை என்றால் கத்துவார். நான் போயி தான் அந்த பஞ்சாயத்தை முடித்து வைப்பேன். நடிப்பு என வந்துவிட்டால் ரொம்ப சின்சியராக இருப்பார். நான் அப்போதே நினைத்தேன் இந்த பெண் இப்படி ஃபயரா இருக்காங்களே நிச்சயம் பெரிய நடிகையாக வருவார் என நினைத்தேன் என கூறினார். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் அளவிற்கு வருவார் என்று நினைக்கவில்லை எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் நடிகர் நெப்போலியன் புகைப்படத்தை காட்டி இவரை பற்றி கூறுங்கள் என கேட்டபோது, நெப்போலியன் ரொம்ப பாசக்காரர். ஷுட்டிங்கில் இருக்கும் அனைவரையும் நன்றாக அண்ணை போல பார்த்துக்கொள்வார். எப்போதாவது சென்னை வந்தால் நான் சென்று அவரை பார்த்துவிட்டு வருவேன். இல்லை என்றால் அவர் வந்து பார்த்துவிட்டு செல்வார். மகனுக்காக சினிமாவை தூக்கி எரிந்துவிட்டு சென்ற ஒரு நல்ல மனிதர் நெப்போலியன் என்று பேசினார்.
மேலும் படிக்க: Jeans படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தவர் இவரா? வாய்ப்பை தவறவிட்ட முன்னணி நடிகர்… யார் தெரியுமா? |