Homeசினிமாபையா 2: இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட பையா படத்தின் இரண்டாம் பாகம்..! சூப்பர் அப்டேட்..!

பையா 2: இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட பையா படத்தின் இரண்டாம் பாகம்..! சூப்பர் அப்டேட்..!

தமிழ் சினிமாவில் அனைத்து வயதினருக்கும் பிடித்த நடிகர்கள் என்றால் சிலர் தான் இருப்பர். அவர்களில் ஒருவர் தான் நடிகர் கார்த்திக். இவர் தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவருக்கு அனைத்து விதமான கதாபாத்திரங்களும் அப்படியே பொருந்தி போகும் என்பதை விட தன்னை அந்த கதாபாத்திரத்திற்குள் பொருத்திக்கொள்வார் என்று தான் கூறவேண்டும்.

இவர் நடிக்கும் கதாபாத்திரங்களாகவே மாறி விடுவார் என்று கூறினால் ஆச்சரிய படுவதற்கு இல்லை. இவர் நடிப்பில் வெளியான முதல் படம் பருத்திவீரன். இந்த படத்தில் இவரது நடிப்ப முதல் படத்தில் நடிப்பது போல இருக்காது. அந்த அளவிற்கு காதாபாத்திரமாகவே மாறி நடித்து இருப்பார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து பையா என்னும் படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் முழுவதுமாக மாறியிருக்கும். ஒரு நகரத்து இளைஞனாக நடித்து இருப்பார்.

இந்த படத்தில் நடிகர் கார்த்தியை ஒரு புதிய பரிமாணத்தில் நாம் பார்த்து இருப்போம். இந்த படம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த படமாகவும் மாறியது. பையா படத்தின் முதல் பாகத்தினை இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் கார்த்தி, தமன்னா, ஜெகன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தான் இந்த படம் வெளியாகி இத்தனை வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அப்டேட் (Paiya 2 Movie New Update) வெளியாகியுள்ளது. இதன்படி இப்படத்தின் இயக்குனரான லிங்குசாமி பையா 2 படத்திற்கான கதை தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் கார்த்தியிடம் கதை கூறியபோது அவர் படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகிவிட்டதால் தனது தோற்றத்தில் முதிர்ச்சி வந்துள்ளதாலும் ஒரு குழந்தைக்கு தந்தையாக நடித்து விட்டதாலும் பையா 2 படத்தில் நடிக்க யோசிக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.

Paiya 2 Movie New Update

எனவே பையா படத்தின் இரண்டாம் பாகத்தில் வேறொரு நடிகர் நடிக்க உள்ளதாகவும், எனினும் இந்த படத்தில் அந்த கார் இருக்கும் என்றும் அதேபோல கார்த்தி (Paiya 2 Movie Hero) மற்றும் தம்ன்னா (Paiya 2 Movie Heroine) இடத்தில் வேறு காதலர்கள் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். எனவே பையா 2 திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: நடிகை ராஷ்மிகா பிறந்தநாளில் வெளியான புதிய படத்தின் போஸ்டர்…
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular