தான் இயக்கிய முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் தான் பிரதீப் ரங்கநாதன். கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் தான் கோமாளி. இந்த படம் தான் பிரதீப் ரங்கநாதனுக்கு முதல் படம். இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவி நடித்து இருந்தார். மேலும் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
இவர்கள் மட்டுமின்றி இப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் ஒரு புதுவிதமான கதைகளத்துடன் இருந்தது எனவே மக்கள் பலருக்கும் பிடித்து இருந்தது. எனவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் லவ் டுடே என்னும் படத்தை இயக்கினார். இந்த படத்தில் இவர் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்நிலையில் தான் தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நடித்த வருகிறர். இந்த படத்தை மாஸ்டர், லியோ உள்ளிட்ட படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி இந்த படம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. முக்கியமான வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் பிரதீப் தற்போது தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தெலுங்கில் மிகவும் பிரபலமான மைத்ரி மூவி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இவருடைய சம்பளம் குறித்த தகவல் (Director Pradeep Salary) வெளியாகியுள்ளது. இவர் இயக்கவுள்ள இந்த புதிய படத்திற்கு சம்பளமாக 10 கோடியை நிர்ணயித்து இருப்பதாகவும் தகவல் (Director Pradeep Ranganathan Salary) வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: Pushpa 2 Teaser: இணையதளத்தில் குவிந்த பார்வையாளர்கள்.. |