Homeசெய்திகள்Thalapathy 69: விஜய்யின் கடைசி படத்தின் இயக்குனர் இவரா..! அப்போ சம்பவம் இருக்கு..!

Thalapathy 69: விஜய்யின் கடைசி படத்தின் இயக்குனர் இவரா..! அப்போ சம்பவம் இருக்கு..!

சில நாட்களுக்கு முன்பு புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். அதுமட்டுமின்றி இனி எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என்றும் இதுவரை கமிட் ஆகியுள்ள படங்களை மட்டும் முடித்து விட்டு முழுமையாக மக்கள் பணியில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் அவர்களின் கடைசி படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த தகவலில் Thalapathy 69 படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த அப்டேட் தான் அது. தற்போது விஜய் அவரின் 68-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். தளபதி இந்த படத்தை தொடர்ந்து Vijay அடுத்ததாக புதிய படத்தில் நடிக்க (Vijay Next Movie) உள்ளார்.

விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக தகவல் வெளியான போதே விஜய்யின் கடைசி படம் என்ன மற்றும் இப்படத்தை யார் இயக்குவார் என்கிற பல கேள்விகளுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இப்படம் எப்படி இருக்கும் எப்படிப்பட்ட கதைகளமாக இருக்கும் போன்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு கூட விஜய்யின் கடைசி படத்தை இயக்குநர் (Vijay Last Movie Director) கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. எனினும் இந்த தகவல் தற்போது வரை உறுதியாகவில்லை.

இந்த நிலையில் தான் தற்போது மற்றொரு முக்கிய செய்தியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக இருப்பவர் தான் வெற்றிமாறன். இவர் தான் விஜய்யின் கடைசி படத்தை (Vijay Last Movie) இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தினை இயக்கி வருகிறார். அதன் பிறகு வாடிவாசல், வடசென்னை 2 ஆகிய படங்களையும் இயக்க உள்ளார். எனவே இதற்கிடையில் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்குவாரா என உறுதியாக தெரியவில்லை.இது குறித்த அப்டேட்டை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இப்படத்தினை தெலுங்கில் ஆர்ஆர்ஆர் படத்தைத் தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது எனவும் பேசப்படுகிறது. மேலும் இதற்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியாகிய லியோ படம் மிகப்பெரிய வெற்றியை அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

Vijay Kadaisi Padam
இதையும் படியுங்கள்: தளபதியை தொடர்ந்து அரசியலில் குதிக்கும் முன்னணி பிரபலம்..! அட நீங்களுமா?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular