Homeசெய்திகள்அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணம் (90s kids marriage expectations) நடப்பது இல்லை. அவர்களுக்கு பெண் கிடைக்கவில்லை போன்ற மீம்ஸ்கள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

ஒரு காலத்தில் பெண் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, பெண் கிடைத்தால் போதுமானது என்று படிக்காத பெண்களை திருமணம் செய்தனர். முன்பெல்லாம் படித்த பெண்கள் வேண்டாம். படிக்காத பெண்கள் தான் வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்து திருமணம் செய்தனர். பிறகு கிராமத்து பெண்கள் தான் வேண்டும். ஓரளவிற்கு கூட்டி படிக்க தெரிந்தால் போதுமானது என்று திருமணம் செய்தனர்.

பிறகு படித்த பெண்கள் இருந்தால் போதும், ஆனால் வேலைக்கு செல்ல வேண்டாம் போன்ற நிபந்தனைகளை விதித்து திருமணம் செய்தனர். பிறகு வேலைக்கு செல்லலாம், ஆனால் நர்ஸ், டீச்சர் வேலைக்கு செல்லலாம் என்ற நிபந்தனை விதித்து திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் இப்போது பொருளாதார ரீதியாக உறுதுணையாக இருக்க வேலைக்கு செல்லும் பெண்களை பலர் தேடி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இவ்வாறாக பெண்கள் படிக்கலாமா, வேண்டாமா, வேலைக்கு செல்லலாமா, வேண்டாமா போன்ற பெண்களை முன்னிறுத்தி சமூகவலைதளங்களில் பதிவிடுவது அதன் மூலம் லைக்ஸ் வருவது எல்லாம் நமக்கு தெரிந்தது தான்.

இந்நிலையில் சூரத்தை சேர்ந்த ஒருவர் பதிவொன்றை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அதிகம் படித்த வேலை செய்யும் பெண்களைத் திருமணம் செய்தால், அது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மோசமான முடிவுகளில் ஒன்று என்று கூறினார். ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்கையில் நடக்கும் கருத்துகளை ஒட்டு மொத்த சமூகத்தின் உரிமையும் இழிவுப்படுத்தும் வகையில் இவரின் பதிவுகள் உள்ளதாக நெடிசன்கள் கருத்துகள் தெரிவிக்கின்றன.

இதற்கு பலரும் நீங்கள் மனைவியை தேடவில்லை, அடிமையை தேடுகிறீர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: என்ன சொல்ல போகிறாய்? காதலனின் காத்திருப்பின் வலி..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular