Homeசெய்திகள்Akshaya Tritiya 2024: அட்சய திருதியை அன்று இதை மட்டும் செய்திடாதீங்க..!

Akshaya Tritiya 2024: அட்சய திருதியை அன்று இதை மட்டும் செய்திடாதீங்க..!

அட்சயம் (akshaya tritiya meaning in Tamil) என்றால் தேயாது, குறையாது என்று பொருள். இந்த நாளில் நாம் எது செய்தாலும் அது பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை (what to do on Akshaya tritiya in Tamil) இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். சமணர்களை பொறுத்தவரை சமண தீர்த்தகரங்கர்களுள் ஒருவராகிய ரிசபதேவர் நினைவு நாளாக பார்க்கிறார்கள். தமிழ் மாதமான சித்திரை வளர்பிறையில் வரும் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். இந்த நாளில் பலரும் தானம் வழங்கி புண்ணியங்களை சேர்ப்பார்கள். ஒரு சிலர் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள்.

முதல் யுகமாக பார்க்கப்படும் கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவிக்கப்பட்ட நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாள் ஜோதிட ரீதியாக இந்து மக்கள் பார்க்கிறார்கள். சொர்க்கத்தில் இருந்து புனித நதியாக கங்கை (பூமிக்கு) இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்ட நாளாக கருதப்படுகிறது.

இந்த அட்சய திருதியை இந்த ஆண்டு 2024 மே 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் நாம் எது செய்தாலும் அது பத்து மடங்காக பெருகும் என்று கூறுவார்கள். அது நேர்மறையாக இருந்தாலும், எதிர்மறையாக இருந்தாலும் அந்நாளில் நாம் எது செய்தாலும் பத்து மடங்காக பெருகும் என்று கூறுவார்கள். எனவே அட்சய திருதியை அன்று செய்யக்கூடியவை (Akshaya tritiya significance in Tamil) மற்றும் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

செய்ய வேண்டியவை

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கலாம். அன்று தங்கம் வாங்கினால் வருடம் முழுவதும் செல்வத்தை கொடுக்கும். உங்கள் வீட்டில் பொருளாதார நிலை நல்வாழ்வு கிடைக்கும். அதனால் இந்நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும்.

இந்நாளில் வாகனம் வாங்கினாலும் சிறந்தது. தங்கம் மட்டுமன்றி கார் மற்றும் மோட்டார் பைக் போன்றவற்றை வாங்கினால் பாதுகாப்பான பயணத்தை இந்நாள் உறுதிசெய்யும். வாகனம் வாங்க நினைத்தால் இந்நாளில் வாங்குவது சிறந்தது.

புதிய வீடு வாங்கலாம். இந்நாளில் புதிய வீடு வாங்குவது சிறந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் வீடு கிரஹ பிரவேஷம் செய்தால் தீய சக்திகள் நம்விட்டு விலகும்.

இதுபோன்ற பொருட்கள் மட்டுமல்லாமல் ஏதேனும் ஒரு நல்ல காரியத்தை தொடங்கினால், அந்த காரியம் முழுமையாக வெற்றி அடையும். நீங்கள் தொடங்கும் காரியமும் எவ்வித சிக்கல் இல்லாமல் முடியும்.

செய்யக்கூடாதவை

அட்சய திருதியை (Akshaya Tritiya in tamil) அன்று வீடு இருளாக வைத்திருக்க கூடாது. அன்று விளக்கேற்றி வெளிச்சதை கொண்டு வாருங்கள்.

அட்சய திருதியை அன்று கோபம் கொள்ள வேண்டாம். ஏனென்றால் இந்நாளில் கோபம் கொண்டு பிறர் மனதை புண்படுத்தும் எந்த செயலும் நாம் செய்யாமல் இருப்பது சிறந்தது.

Akshaya tritiya significance in Tamil
மேலும் படிக்க: Akshaya Tritiya 2024: அட்சய திருதியை அன்று இதை செய்தாலே போதும்..! வீட்டில் செல்வம் பெருகும்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular