Homeசெய்திகள்Swiggy நிறுவனத்தின் தோசை விற்பனை..! கடந்த 12 மாதத்தில் எத்தனை மில்லியன் தெரியுமா?

Swiggy நிறுவனத்தின் தோசை விற்பனை..! கடந்த 12 மாதத்தில் எத்தனை மில்லியன் தெரியுமா?

பெரும்பாலான இந்தியர் அதிலும் தென்னிந்தியர் அதிகம் விரும்பி உண்ணும் காலை உணவுகளில் ஒன்று தான் தோசை. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாகவும் உள்ளது. இந்நிலையில் தான் உலகம் முழுவதும் நேற்று (03.03.2024) உலக தோசை தினம் கடைப்பிடிக்கப்பட்டது. எனவே புகழ்பெற்ற பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான Swiggy கடந்த ஒரு வருடத்தில் தங்கள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட மொத்த தோசைகளின் எண்ணிக்கை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் (Swiggy dosa sales) பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த தோசையானது கர்நாடகாவில் உள்ள உடுப்பி என்ற நகரத்தில் தான் தோன்றியதாக இன்றுவரை நம்பப்படுகிறது. மேலும் இதனை ஒரு சமையல்காரர் தான் கண்டுபிடித்தார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஸ்விக்கி நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி கடந்த ஒரு வருடத்தில் எத்தனை தோசைகள் இந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்ற தகவலை (Swiggy dosa sales in Last Year) வெளியிட்டுள்ளது.

இந்த தகவலின் படி ராஞ்சி, கோயம்புத்தூர், புனே மற்றும் போபால் ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான தேசை ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பகுதிகளில் இருந்து ஆர்டர் செய்யப்படும் அதிக அளவில் தோசை இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதில் முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான ஒன்று என்றால், அது கோயம்புத்தூரைச் சேர்ந்த பயனர் ஒருவர் கடந்த ஆண்டில் மட்டும் 447 தோசைகளை ஆர்டர் செய்துள்ளார்.

Swiggy dosa sales

மேலும் இந்த தகவலில் ரம்ஜான், கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் போது கூட அதிக ஆர்டர் செய்யப்பட்ட உணவில் தோசை இரண்டாவது இடத்தில் தேசை தான் இருந்தது. தோசை அதிகமாக காலை மற்றும் இரவு நேர உணவாக தேசை உள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டில் மட்டும் 29 மில்லியன் (2.90 கோடி) தேசைகளை வழங்கியுள்ளதாக கூறியுள்ளது.

இதையும் படியுங்கள்: Manjummel Boys Box Office Collection: படத்தின் பட்ஜெட்டை விட பல மடங்கு வசூல் செய்த திரைப்படம்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular