தமிழர்கள் எப்போதும் உலக அளவில் பல சாதனைகளை தொடர்ந்து செய்து நம் நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்கும் தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு நிகழ்வு தான் இப்போதும் நிகழ்ந்துள்ளது. மேலும் இதன் மூலம் ஒரு தமிழர் இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை சேர்த்துள்ளார்.
நாம் அனைவரும் பென்சிலின் என்னும் மருந்தை கண்டிப்பாக அறிந்து இருப்போம். இது சிறந்த உயிர்க்காக்கும் மருந்தாகவும் சிறந்த ஆன்டிபயாடிகாகவும் இருந்து வருகிறது. இதனை பல வருடங்களுக்கு முன்பு அலெக்ஸாண்டர் பிளம்மிங் என்னும் விஞ்ஞானி கண்டுபிடித்தார். இன்று வரை இது ஒரு சிறந்த ஆன்டிபயாடிக்காக உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது இந்த பென்சிலின் மருந்துக்கு அடுப்படியாக ஒரு சிறந்த உயிர்க் காக்கும் மருந்தை தற்போது தமிழகத்தை சேர்ந்த முனைவர் செந்தில் குமார் (Doctor Senthil Kumar from Tamil Nadu) தற்போது கண்டுபிடித்துள்ளார். இந்த மருந்தின் பெயர் எக்ஸ்ப்லைஃபெப் என்பது ஆகும். மேலும் இந்த மருந்திற்கு அமொரிக்க உணவு மற்றும் மருந்து தரக்கட்டுபாடு நிறுவனம் (FAD) அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
அலெக்ஸாண்டர் பிளம்மிங் கண்டுபிடித்து இரண்டாம் உலகப் போர் காலத்தில் பல உயிர்களை காக்க உதவும் மருந்து தான் இந்த பென்சிலின். இதற்கு பிறகு நுண்ணுயிர்களால் உற்பத்தி செய்யப்படும் பல ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை 258 வகையான ஆண்டிபயாடிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மேலும் உலக அளவில் மொத்தம் 4,283 மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.
இத்தனை மருந்துகள் பயன்பாட்டில் இருந்தாலும் இவற்றில் ஒன்றுகூட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது இல்லை. ஆனால் தற்போது தமிழ்நாட்டின் முனைவர் செந்தில் குமார் எக்ஸ்ப்லைஃபெப் என்னும் மருந்தை கண்டுபிடித்துள்ளார். மேலும் இந்த மருந்துக்கு தற்போது உலக அளவில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
இந்த எக்ஸ்ப்லைஃபெப் என்ற மருந்து சிறுநீர் குழாயில் பாக்டீரியாவினால் ஏற்படும் பல வகையான தொற்றுகளை நீக்குவதில் சிறந்து செயல்படுகிறது. மேலும் நுரையீரலில் ஏற்படும் நிமோனியா போன்ற நோய்களையும் இது குணப்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிறுநீர்க்குழாய் தொற்றுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் மருந்துகளை விடவும் இது சிறப்பாக செயல்படுவதாக கூறுகின்றனர்.
இதையும் படியுங்கள்: வங்கதேசத்தில் 7 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து..! 44 பேர் உயிரிழந்த பரிதாபம்..! |