தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராகவும் முன்னணி நடிகராகவும் இருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் பல வருடங்களாக தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராகவும் உள்ளார். இவர் இறுதியாக விக்ரம் படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் தான் தற்போது இவர் தனது அடுத்தப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த தக் லைஃப் (Thug Life Movie) திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் அவருடன் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், நாசர், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் மலையாள நடிகரான துல்கர் சல்மான் (Dulquer Salmaan) முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்காக இவருக்கான ஆன் போர்டு போஸ்டர்களும் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியது.
இந்நிலையில் தான் தற்போது இந்த கால்ஷீட் பிரச்சனையால் இவர் இந்த தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகி இருப்பதாக (Dulquer Salmaan walked out of Thug Life) சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் துல்கர் சல்மானின் கதாபாத்திரத்தில் இதற்கு முன்னர் நடிகர் சிம்பு தான் நடிப்பதாக இருப்பதாக இருந்தது. ஆனால் பிறகு அவர் நடிக்க முடியாமல் போனது.

நடிகர் துல்கர் சல்மான் தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் நடிகர் சூர்யாவின் 43-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அதுமட்டுமின்றி அவர் மலையாளத்தில் லக்கி பாஸ்கர், காந்தா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இதன் காரணமாக தற்போது இப்படத்தில் இருந்து அவர் விலகியுள்ளார் (Dhulkar Left From Thug Life Movie) என்று தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: Koffee With DD: நிகழ்ச்சியை திடீரென முடித்தது ஏன்? மனம் திறந்த DD..! |