மனிதர்கள் முன்னேற்றத்திற்காக செய்யும் ஒவ்வொரு செயலும் இயற்கையை பாதித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக இயற்கை சீற்றங்கள் பேரழிவுகள் போன்றவை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இன்று (15.04.2024) அதிகாலை பப்புவா நியூ கினியாவில் (Earthquake in Papua New Guinea) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆஸ்திரேலியாவிற்கு அருகில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா (Papua New Guinea) என்ற தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில அமைப்பின் படி இந்த பப்புவா நியூ கினியா தீவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் ஆகும்.
இதன் காரணமாக மக்கள் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை உணர்வுடன் தான் இருப்பார்கள். அங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் இந்த நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் தான் கட்டப்பட்டிருக்கும். இந்த தீவில் கடந்த 2018 ஆம் ஆண்டு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ஒன்று ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 125 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். கடந்த மாதம் 23 ஆம் தேதியும் பப்புவா நியூ கினியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வை உணர்ந்த மக்கள் உடனே வீடுகளை விட்டு வெளியேறினர் இதனால் பெரிய அளவிலான சேதங்கள் தவர்க்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று (15.04.2024) காலை 6.56 மணியளவில் மீண்டும் இந்த தீவில் நிலநடுக்கம் (Earthquake in Today) ஏற்பட்டுள்ளது. பூமியில் 98 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. இந்த நில அதிர்வு காரணமாக கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
அங்குள்ள பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் கட்டிடங்களில் யாராவது சிக்கி உள்ளார்களா என்பது குறித்தும் பாதிப்புகள் குறித்தும் முழு தகவல் எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. அதேபோல் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.