Homeவேலைவாய்ப்பு செய்திகள்ECHS Recruitment 2024: தஞ்சாவூரில் ரூ.75000/- சம்பளத்தில் வேலை..! மிஸ் பண்ணிடாதீங்க..!

ECHS Recruitment 2024: தஞ்சாவூரில் ரூ.75000/- சம்பளத்தில் வேலை..! மிஸ் பண்ணிடாதீங்க..!

ECHS Recruitment 2024: தமிழகத்தில் படித்து முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர். அதிலும் அரசு வேலைக்கு தயராகி தேர்வு எழுதுபவர்களும் அதிகமானோர்கள் உள்ளனர். இந்நிலையில் ஆண்டு தோறும் அரசு வேலைக்கு போட்டி போடுபவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள்.

தற்போது முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) இருந்து பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய செய்தி வந்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ECHS Recruitment 2024 in Tamil ஆம் ஆண்டிற்கான அறிவிப்பின் படி நர்சிங் அசிஸ்டெண்ட் பணிகளுக்கு காலியிட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான கல்வித்தகுதிகள், சம்பளம், வயது வரம்பு, கடைசி தேதி போன்றவை கீழே கொடுக்கப்பட்டள்ளது. அதனை தெரிந்துக்கொண்டு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

நர்சிங் உதவியாளர், சௌகிதார், பல் சுகாதார நிபுணர், மருந்தாளுனர், மருத்துவ அதிகாரி ,சஃபைவாலா, பெண் உதவியாளர், பல் மருத்துவர் பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வித்தகுதிகள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.

  • நர்சிங் உதவியாளர் பணிக்கு

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து 5 வருட அனுபவத்துடன் நர்சிங் அல்லது DGNM இல் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • சௌகிதார் பணிக்கு

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • பல் நலன் மருத்துவர் பணிக்கு

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்த 5 வருட அனுபவத்துடன் பல் சுகாதார நிபுணரிடம் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • மருந்தாளர் பணிக்கு

விண்ணப்பதாரர்கள் B.Pharm அல்லது D.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து 3 வருட அனுபவத்துடன் இருக்க வேண்டும்.

  • மருத்துவ அதிகாரி

விண்ணப்பதாரர்கள் எம்பிபிஎஸ் (MBBS) தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 5 வருட அனுபவத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • சஃபைவாலா பணிக்கு

விண்ணப்பதாரர்கள் 5வருட அனுபவத்துடன் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

  • பெண் உதவியாளர் பணிக்கு

விண்ணப்பதாரர்கள் 5 வருட அனுபவத்துடன் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

  • பல் மருத்துவர்

விண்ணப்பதாரர்கள் BDS பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 5 வருட அனுபவத்துடன் இருக்க வேண்டும்.

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிபதற்கு தனித்தனியே வயது வரம்பு, ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேலும் பல தகவல்களை தெரிந்துக்கொள்ளவதற்கு அதிகாரப்பூர்வ இணையதளமான www.echs.gov.in பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். (ECHS job vacancy 2024 details in tamil) அறிவிப்பின் படி இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 08.04.2024 முதல் 02.05.2024 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தகவல் கூறப்பட்டுள்ளது.

இந்த ECHS Recruitment 2024 அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆஃப் லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

[rank_math_rich_snippet id=”s-120155e7-4b1c-4331-b1c8-bccd26123e6c”]

மேலும் படிக்க: டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவரா நீங்கள்? 42,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை..! எக்ஸாம் கூட இல்ல..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular