தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்க தொடங்கிவிட்டது என்றே கூறலாம். ஒருபுறம் தேர்தல் பிரசாரம், மறுபுறம் வாகன சோதனை என்று தமிழக தேர்தல் களம் சூடுப்பிடிக்க தொடங்கிவிட்டது என்றே கூறலாம்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy Therthal Pracharam) தேனி மக்களவை தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும அதன் கூட்டணி கட்சிகள் தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை முக்கியமாக தேர்தல் (Nadalumandra Therthal 2024 ) வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று கூறினார்.
ஸ்டாலின் தமிழக விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறார். இங்கு 65 சதவீத விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களை பற்றி ஒருமுறை கூட அவர் பேசியதில்லை என்றும் தெரிவித்தார். கறவை மாடு வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், லேப்டாப் வழங்கும் திட்டம், ஆடுகள் வழங்கும் திட்டம் போன்ற திட்டத்தை ரத்து செய்தார். ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டமான கால்நடை பூங்கா திட்டத்தை செயல்படாமல் தடுத்து வைத்துள்ளதார்.
தென்தமிழக மக்களின் நீர்ராதாரமாக இருக்கும் முல்லை பெரியார் அணையின் நீர் தேக்க அளவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 142 அடியாக மாற்ற நடவடிக்கை எடுத்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது 152 நீர் தேக்க அளவாக மாற்றினோம். ஆனால் இதனை எதிர்த்து கேரள அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இதனை இந்த திமுக அரசு கண்டுக்கொள்ளவில்லை. இதற்கு ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
நான் காலையில் மதுரை சந்தைக்கு போயிட்டு வந்தேன் அங்கு ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.15 உயர்ந்திருப்பதாகவும், மற்ற பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் கவலை தெரிவித்தனர். விவசாயிகளை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? எள்ளு எது கொள்ளு எது என்றே அவருக்கு தெரியாது என்று கூறினார். ஒன்னும் தெரியாத பொம்மை முதல்வராக தான் உள்ளார் என்று குற்றம் சாட்டினார்.
அவரிடம் 10 வகை தானியங்களை காண்பித்து ஒவ்வொன்றின் பெயர் என்னவென்று கேட்டுப்பாருங்கள் அவருக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் செல்லும் இடமெல்லாம் எங்களை பற்றி குறை கூறி தவறான குற்றச்சாட்டுகைள மட்டும் வைக்கிறார். நாங்கள் பாஜக கட்சியினருக்கு பயப்படுகிறோம் என்று கூறுகிறார். பாஜக இல்லை வேறு எந்த கட்சியாக இருந்தாலும் நாங்கள் பயப்படமாட்டோம். எதிர்கட்சியாக இருக்கும்போது பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டிவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்ததும் வெள்ளை கொடி காட்டினீர்கள். எங்களை பற்றி பேச உங்களுக்கு தகுதி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் (Edappadi Palanisamy Pracharam 2024) சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க: முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஒரே தொகுதியில் பிரசாரம்… எந்த ஊர் தெரியுமா? |