விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கேப்ரில்லா (Gabriella). இந்த நிலையில் தான் அவர் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் புதிய சீரியலில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இவர் திரைத்துறையில் சிறுவயது முதலே உள்ளார். கேபி 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 7சி என்னும் சீரியலிலும் நடித்து இருந்தார். அதன் பிறகு சில வருடங்களுக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானார். அதன் பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்தார். இந்த சீரியல் இவருக்கு தனி பெயரை வாங்கி கொடுத்தது என்று தான் கூறவேண்டும்.
இந்த நிலையில் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் முடிவடைந்த பிறகு இப்போது சன் டிவியில் விரைவில் தொடங்க உள்ள சீரியலில் (Eeramana Rojave Gabi New Serial) நடிக்கவுள்ளார். பல வருடங்களாக விஜய் டிவியில் பயணித்த அவர் தொடர்ந்து பயணிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர் சன் டிவியில் இணைந்துள்ளார்.
தொடங்க இருக்கும் இந்த புதிய சீரியலில் (Gabriella New Serial in Sun Tv) கேப்ரில்லா மற்றும் ராகுல் ரவி இருவரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலுக்கு மருமகள் என்று பெயர் வைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த சீரியல் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Ramayanam Serial: மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சீரியல்… ப்ரோமோ ரிலீஸ்… |