மக்களவை தேர்தல் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் நாளை தொடங்க உள்ளது. நாளை (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்குசாவடிக்கு சென்று வாக்குப்பதிவு செய்யலாம். வாக்கு சாவடிக்கு சென்று வாக்கு பதிவு செய்ய இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வீட்டிற்கே சென்று அழைத்து வரும் வாகனத்திற்கான எண்ணை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 18 வது மக்களவை தேர்தல் நாளை தொடங்க உள்ளது. இந்த தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 01 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் இந்த மக்களவை தேர்தளுக்காக திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நடைபெறுகிறது.
நாளை மக்களவை தேர்தல் (Parliment Election 2024) தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்று சென்னையில் தமிழக தேர்தல் ஆணைய தலைவர் சத்யபிரதா சாகு (Sathya Pratha Sahoo) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நாளை நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாகவும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குச் சாவடி செல்ல உதவும் வாகனத்திற்கு எண் பற்றியும் தெரிவித்தார்.
நாளை அனைத்து வாக்குச் சாவடியிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். 6 மணிக்கு பிறகு வருபவர்களுக்கு வாக்களிக்க அனுமதி இல்லை.
வாக்குச்சாவடிக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் போன்றவர்களுக்கு உதவும் வகையில் தமிழக தேர்தல் ஆணையம் வாகன வசதியை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க வாக்காளர் இருக்கும் இடத்திற்கு வாகனம் அனுப்பி வைக்கப்படும் என தமிழ தேர்தல் ஆணைய தலைவர் தெரிவித்தார்.