Homeசெய்திகள்ஜூன் 1 ஆம் தேதி வரை வெளியிட கூடாது… தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு..!

ஜூன் 1 ஆம் தேதி வரை வெளியிட கூடாது… தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு..!

இந்தியாவில் மக்களவை தேர்தல் (Parliamentary Election) நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே வெளியானது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை (Post Election Polls) ஜூலை 1 ஆம் தேதி வரை வெளியிடக் கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் 18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த மக்களவை தேர்தலுடன் (Lok Sabha Election) சேர்த்து ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும், 12 மாநிலங்களுக்கான 25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. அதன் பிறகு ஜூன் மாதம் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இருதி முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிட கூடாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் எதிலும் வெளியிட கூடாது என்று தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Lok Sabha Election

அதேபோல் தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்த பிறகு எந்த கருத்துக் கணிப்பு (Bans Post Election Polls Result) முடிவுகளையும் ஊடகங்கள் வெறியிடி கூடாது எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுவதால் தேர்தல் முடிந்த மாநிலங்களில் கருத்துக் கணிப்பு வெளியானால். அது மற்ற இடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதற்காக தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க: பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு..! தேர்தல் பற்றிய முழு விவரம்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular