இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் முதல் கட்டமாக நடைபெற உள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தமிழக தேர்தல் தலைமை அதிகாரி ஒரு முக்கிய அறிவிப்பை (Therthal Prachara Timing) வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் (Lok Sabha Election) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக (கூட்டணி கச்சிகள்) மற்றும் நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தலுக்கு இரண்டு நாள் முன்பு அனைத்து கட்சிகளும் அவர்கள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அதன்படி வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி வழக்கம் போல் மாலை 5 மணிக்கு பிரச்சாரம் ஓயும் (Lok Sabha Election Prachara Timing) என தெரிவிக்கப்படிருந்தது.

ஆனால் இந்த வருடம் கோடை வெயில் காரணமாக பிரச்சாரம் செய்ய ஒரு மணி நேரம் கூடுதலாக (Prachara Timing Increase) ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு பதிலாக மாலை 6 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்வு பெறும் என தமிழக தேர்தல் ஆணையத்தின் தலைவர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.