மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தியாவில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் முடிந்த பிறகு ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) அறிவித்துள்ளது.
தேர்தல் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் அவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் சில மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் மே 13 ஆம் தேதி வரை 4 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
ஏப்ரல் 26 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெதுல் (Betul)என் தொகுதியிலும் தேர்தல் நடைபெற இருந்த நிலையில். அந்த தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த அசோக் பாலாவி என்ற வேட்பாளர் திடீரென (Lok Sabha Election is Postponed) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் மரணம் அடைந்தால் அந்தத் தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். இந்த விதியின் படி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பெதுல் தொகுதியில் (Parliament Election is Postponed) நடைபெற இருந்த மக்களை தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் தள்ளி வைப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தொகுதியில் வேறொரு தேதியில் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.