தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் (Lok Sabha Election 2024) நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அனைத்து காட்சிகளும் அவர்கள் வேட்பாளர்களுக்கு ஆதராவாகவும், எதிர்கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றர்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு சேகரிப்பது மட்டுமின்றி மற்ற கட்சிகள் செய்யும் தவறுகளையும் சுட்டிகாட்டி வருகின்றனர். அரசியல் கட்சிகள் மற்றும் அதன் வேட்காளர் மற்றும் பிரச்சாரம் செய்யும் தலைவர்கள் செய்யும் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தும் வருகின்றனர்.
இவ்வாறு தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது சுமார் 200 -க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 169 புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜகவிடம் இருந்து பெறப்பட்ட 51 புகார்கிளல் இருந்து 38 புகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி இடமிருந்து 59 புகார்கள் பெறப்பட்டது அதில் 51 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல அரசியல் கட்சிகள் பொடுத்த புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் சிவிஜில் செயலி மூலமாக பொதுமக்கள் அரசியல் கட்சிகள் மீது தெரிவித்த 2,68,080 புகார்களில் இருந்து 2,67,762 புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது (Action on Political Parties) என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.