Homeசெய்திகள்Voter ID இல்லையா..? ஆனாலும் வாக்களிக்கலாம்... இந்த ஆவணம் இருந்தால் போதும்!

Voter ID இல்லையா..? ஆனாலும் வாக்களிக்கலாம்… இந்த ஆவணம் இருந்தால் போதும்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India) விதியின்படி 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் ஆவர். அதன்படி வாக்காளராக பதிவு செய்தும் உங்களுக்கு இன்னும் வாக்காளர் அடையாள அட்டை வரவில்லையா? இதனால் வாக்களிக்க இயலாமல் போகுமோ என்ற பயம் உங்களுக்கு தேவை இல்லை. வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் மேலும் 12 ஆவணங்களை அடையாளமாக கொண்டு வாக்களிக்க முடியும்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் படி வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (Vakalar Adayala Attai) மிகவும் முக்கியமான ஆவணமாகும். இதற்காகவே தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு அவர்கள் வாக்களிக்க பூத் ஸ்லிப் வழங்கப்படும். ஆனால் இதனை ஒரு அடையாள ஆவணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

Voter ID -க்கு பதிவு செய்தும் கிடைக்காமல் இருப்பவர்களும், வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்தவர்களும் வாக்காளர் அடையாள ஆவணம் இல்லாமல் வாக்களிக்க முடியும். இதற்காக தேர்தல் ஆணையம் 12 அடையாள ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளது.

Voter ID

தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 12 ஆவணங்கள்

  • ஆதார் அட்டை
  • பான்கார்டு
  • ரேஷன் அட்டை
  • பாஸ்போர்ட்
  • ஓட்டுநர் உரிமம்
  • வங்கி மற்றும் அஞ்சல் பாஸ்புக்
  • புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்
  • புகைப்படத்துடன் கூடிய அரசு ஊழியர் அடையாள அம்டை
  • எம், எம்எல்ஏ, எம்எல்சி அதிகாரப்பூர்வ அடையாள அட்டை
  • அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ்
  • மத்திய அரசின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை
  • தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) இல்லாமலும் வாக்காளர்கள் வாக்களிக்க என தேர்தல் ஆணையம் (Election Commission Announced) தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: திடீரென 2வது முறையாக முடங்கிய வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம்…
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular