தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுப்பிடிக்க தொடங்கிவிட்டது என்றே கூறலாம். தமிழகத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் தேர்தல் பிரச்சாரம் ஒருபுறமும், மற்றொரு புறம் வாகன சோதனை போன்றவை மறுபுறமும் என்று தேர்தல் களம் அனல் பறக்கிறது.
தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு (TN Election Officer Satya Pratha Sahu interview) சென்னையில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் தொடர்ந்து தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாகன சோதனைகளும் முடக்கிவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் ஜூன் 4-ஆம் தேதி வரை (TN Election Rules in Tamil) அமலில் இருக்கும். தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வரை தேர்தல் முடிந்த பிறகும் வாகன சோதனை நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50000/-க்கு மேல் பணம் எடுத்து சென்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு (Tamizhaga Therthal Athigari Satya Pratha Sahu) தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையால் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற ரூ.208 கோடி வரை பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தமிழகத்தில் ரொக்க பணம் ரூ.88.12 கோடி பணம் மற்றும் ரூ.4.53 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை தாம்பரம் எக்ஸ்பிரஸில் ரூ.4 கோடி சிக்கியத தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வருமான வரித்துறையினருக்கும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதால் அவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு இந்த பணம் யாருக்கு சொந்தமானது யாருக்காக எடுத்து செல்லப்பட்டது போன்ற தகவல்கள் கிடைக்கும் என்று கூறினார்.
மேலும் அவர் தமிழகத்தில் 2 கோடியே 80 லட்சத்து 59 ஆயிரத்து 559 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.