Homeசெய்திகள்ஓட்டு போட ஊருக்கு போறீங்களா? தேர்தல் ஸ்பெஷல் பேருந்துகள் இயக்கம்..!

ஓட்டு போட ஊருக்கு போறீங்களா? தேர்தல் ஸ்பெஷல் பேருந்துகள் இயக்கம்..!

Election Special Buses 2024: நாடு முழுவதும் 18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19-ஆம் தேதி நடக்கும் வாக்குப்பதிவின் போது தமிழ்நாடு உட்பட மொத்தம் 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்காக 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் (Election Special Buses 2024 in tamil) என்று தமிழக அரசு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மட்டும் சுமார் 2,970 சிறப்பு பேருந்துகள்(Election Sirappu Perunthu 2024) இயக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 17, 18 தேதிகளில் சென்னையில் இருந்து 2, 970 பேருந்துகள் என மொத்தம் 7,154 பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் இருந்து 3, 060 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்த பிறகு ஏப்ரல் 20 மற்றும் 21 தேதிகளில் சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்காக வசதியாக 1825 சிறப்பு பேருந்துகளும், 2 நாட்களுக்கு சேர்த்து மொத்தம் 6,009 பேருந்துகளும் (Election Special Buses TN) இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம், காரைக்குடி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கோவை, சேலம் திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் 17/04/2024 மற்றும் 18/04/2024 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற் கூறப்பட்ட இரண்டு நாட்களுக்கு 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 20/04/2024 மற்றும் 21/04/2024 ஆகிய தேதிகளில், தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 1,825 சிறப்புப் பேருந்துகளும் இரண்டு நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 6,009 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,295 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 8,304 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து: திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி. கடலூர், சிதம்பரம் ஆகிய இடங்களுக்கு சென்னையில் இருந்து இயக்கப்படும்.

பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். மேலும், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும். அதே போல், திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்கமாக செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் (SETC உட்பட) அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

தாம்பரம் முதல்: தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந்துகள் வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக (SETC உட்பட) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, புதுச்சேரி, கடலூர் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் மற்றும் பூவிருந்தவல்லி வழியாக காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Election Sirappu Perunthu 2024
மேலும் படிக்க: தொடர் விடுமுறை… தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular