தொழில்நுட்பம்

Electric Scooters in India..! இந்தியாவில் சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள்..!

electric scooters in india பற்றி இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இன்றைய காலக்கட்டத்தில் மோட்டார் வாகனங்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நம் சுற்றுசூழலுக்கு பாதிப்பு நாளுக்கு நாள் ஏற்பட்டு கொண்டு தான் வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல மாநிலங்களில் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையில் பல எலக்ட்ரிக் பைக்குகள் வந்துவிட்டன. அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த எலக்ட்ரிக் பைக்குளை (Electric Scooters Models in tamil) காண்போம்.

இந்தாண்டின் சிறந்த எலக்ட்ரிக் பைக்ஸ்top 5 electric scooter in india

இந்த ஆண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்க நினைப்பர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள (top 5 electric scooter in india) ஸ்கூட்டர்களின் மாடல்களை பரிந்துரைக்கலாம்.

  • ola electric scooter
  • ஆம்பியர் மேக்னஸ் – Ampere magnus ex electric scooter
  • பவுன்ஸ் இன்ஃபினிட்டி – Bounce infinity e1 electric scooter
  • ஒகினாவா ரிட்ஜ் பிளஸ் – Okinawa Ridge Plus electric scooter
  • ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா – Hero Electric Optima electric scooter

OLA S1 and OLA S1 Pro

இந்தியாவில் அதிக அளவு விற்பனையாகும் Electric Scooter-களில் முதலிடத்தில் உள்ளது இந்த ஸ்கூட்டர். இந்நிறுவனம் OLA ஸ்கூட்டர்களை OLA S1, OLA S1 Pro, OLA S1 AIR, ஆகிய மூன்று மாடல்களில் கொடுத்து வருகிறது. OLA S1 ஸ்கூட்டர்கள் பார்பதற்கு மாடலாகவும் அதே சமயம் மலிவாகவும் கிடைக்கிறது. தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் OLA S1 and OLA S1 Pro ஸ்கூட்டர்களின் வித்தியாசங்களை இங்கு காணலாம். இதனை பொறுத்து பயனாளர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ற ஸ்கூட்டர்களை பரிந்துரைக்கலாம். OLA S1 pro price மற்றும் OLA S1 Pro price இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய சிறப்பம்சங்கள்OLA S1 S1 Pro
விலை (Price)₹ 1,23,490₹ 1,63,873
சவாரி வரம்பு (Riding Range)121 கிமீ195 கிமீ
சார்ஜிங் நேரம் (Charging time)5 மணி நேரம்6.5 மணி நேரம்
சக்தி (Power)8500 W11000 W
எடை (Weight)121116
seat hight 792805

OLA S1 11 வண்ணங்களிலும், OLA S1 Pro 5 வண்ணங்களிலும் கிடைக்கிறது.

OLA S1 scooter colors

OLA S1 Pro scooter colors

Ampere Magnus EXஆம்பியர் மேக்னஸ்

ஆம்பியர் மேக்னஸ் ஸ்கூட்டர்கள் நீளமான மற்றும் அகலமான சவாரிக்கு ஏற்ற வகையில் இந்த (EV Scooter) ஸ்கூட்டர் உள்ளது. முன்புறம் மற்றும் பின்புறம் டிரம் பிரேக்குகளுடன், ஆம்பியர் மேக்னஸ் EX இரண்டு சக்கரங்களின் ஒருங்கிணைந்த பிரேக்கிங் அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்கூட்டர் 1,200 வாட் மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. சார்ஜிங் நேரம் 5 முதல் 6 மணி நேரம் என மதிப்பிடப்படுகிறது. இதன் விலை (Ampere Magnus EX Price) ரூ.77,000 முதல் தொடங்குகிறது.

சவாரி வரம்பு Riding Range121 கிமீ
அதிகபட்ச வேகம் Top Speed53 கி.மீ
எடை Weight90 கிலோ
பேட்டரி சார்ஜிங் நேரம் Battery Charging Timeநேரம் 6-7 மணி
மதிப்பிடப்பட்ட சக்தி Rated Power1200 W
இருக்கை உயரம் Seat Height780 மிமீ

Ampere Magnus EX Colours

  • கடல் நீலம் (Ocean Blue)
  • பனிப்பாறை வெள்ளை (Glacial White)
  • கிராஃபைட் கருப்பு (Graphite Black)
  • விண்மீன் சாம்பல் (Galactic Grey)
  • உலோக சிவப்பு (Metallic Red)

Bounce infinity e1 electric scooterபவுன்ஸ் இன்ஃபினிட்டி

பவுன்ஸ் இன்ஃபினிட்டி ஒரு மின்சார (e-Bikes) ஸ்கூட்டர் ஆகும். இது பார்பதற்கு அழகாகவும் நேர்தியாகவும் இருக்கும். இந்த வாகனத்தை பேட்டரியுடனும், அல்லது பேட்டரி இல்லாமல் வாகனத்தை மட்டும் வாங்கிக்கொள்ளலாம். பேட்டரியை விருப்பப்பட்டால் வாடகைக்கு விடலாம். இவ்வாறு தனித்துவமான அம்சம் இருப்பதால் இதன் ஆரம்பவிலை (Bounce Infinity E1 Price) ரூ.60,000 இருந்து தொடங்குகிறது.

சவாரி வரம்பு (Riding Range)85 கிமீ
அதிகபட்ச வேகம் (Top Speed)65 கி.மீ
எடை (Weight)94 கிலோ
பேட்டரி சார்ஜிங் (Battery Charging)4 மணி நேரம்
சக்தி (Rated Power)1500 W
இருக்கை உயரம் (Seat Height)780 மிமீ

Bounce Infinity E1 Colours

ஸ்பார்க்கிள் பிளாக் (Sparkle Black)
வால் நட்சத்திரம் சாம்பல் (Comet Gray)
ஸ்போர்ட்டி ரெட் (Sporty Red)
முத்து வெள்ளை (Pearl White)
டெசாட் வெள்ளி (Desat Silver)
லிமிடெட் பதிப்பு (Ltd Edition)

Okinawa Ridge Plusஒகினாவா ரிட்ஜ் பிளஸ்

இந்த ஒகினாவா ரிட்ஜ் பிளஸ் ஸ்கூட்டர் அதிக திறன் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டர் வாகனம் மற்றும் பேட்டரியுடன் வருகிறது. முன்புறம் மற்றும் பின்புற டிரம் பிரேக்குகளுடன், Okinawa Ridge Plus எலக்ட்ரானிக் உதவி பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருகிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை செல்லும் தன்மை கொண்டது. அதிகபட்ச வேகம் மணிக்கு 55 கிமீ ஆகும். Okinawa Ridge Plus price இதன் விலை ரூ.70,000 முதல் தொடங்குகிறது.

சவாரி வரம்பு (Riding Range)84 கி.மீ
உச்ச வேகம் (Top Speed)45 கி.மீ
பேட்டரி சார்ஜ் நேரம் (Charging Time)2-3 மணி
சக்தி (Rated Power)800 W
இருக்கை உயரம் (Seat Height)735 மி.மீ
அதிகபட்ச சக்தி (Max Power)1,700 W

Okinawa Ridge Plus Colours

  • நீலம் Blue
  • சாம்பல் Grey
  • வெள்ளி Silver

Hero Electric Optimaஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா

ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா என்பது மின்சார ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டர் சிட்டி ஸ்பீட் (எச்எக்ஸ்) City Speed (HX) மற்றும் கம்ஃபோர்ட் ஸ்பீட் (எல்எக்ஸ்) Comfort Speed (LX) ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள ஹார்டுவேரில் டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள் மற்றும் டூயல் ரியர் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன.

சவாரி வரம்பு Riding Range65 கி.மீ
உச்ச வேகம் Top Speed25 கி.மீ
எடை Weight86 கிலோ
பின்புற பிரேக் வகை Rear Brake TypeDrum
முன் பிரேக் வகை Front Brake TypeDrum

Hero Electric Optima Colours

சிவப்பு red
சாம்பல் gray
நீலம் Blue
வெள்ளை White

மேலும் படிக்க: Hero Passion Plus: ஹீரோ பேஷன் பிளஸ் பற்றிய தகவல்கள்..!

Electric Bikes Scooters – FAQS

1. மின்சார ஸ்கூட்டர் எத்தனை மணி நேரம் நீடிக்கும்? How many hours does an electric scooter last?

உங்கள் எடை, ஓட்டும் முறை மற்றும் உங்கள் பகுதியில் உள்ள சாலைகளின் நிலைமைகள் ஆகியவற்றால் ஆயுட்காலம் பாதிக்கப்படும்.

2. மின்சார ஸ்கூட்டரை தினமும் சார்ஜ் செய்யலாமா? Can I charge electric scooter every day?

பொதுவாக, உங்கள் மின்சார ஸ்கூட்டரை தினமும் அல்லது ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு சார்ஜ் செய்வது பாதுகாப்பானது.

3. மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி ஆயுள் எவ்வளவு?

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிகள் 2 முதல் 4 ஆண்டுகள் பேட்டரி திறன் ஆகியவற்றைப் பொறுத்து நீடிக்கும். உங்கள் ஸ்கூட்டரை அதிகமாகப் பயன்படுத்தினால் அல்லது தவறாக சேமித்து வைத்தால், பேட்டரி ஆயுள் குறைவாக இருக்கும்.

Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago