உலகில் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தற்போது எக்ஸ் வலைதளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அவர் ட்டிவிட்டர் வளைதளத்தை வாங்கியது முதலே பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளார். அந்த வகையில் ஆட்குறைப்பு, வளைதளத்தின் பெயர் மாற்றம், ப்ளூடிக், ஆரஞ்சு டிக், மாத சந்தா என பல திடீர் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் அடுத்து என்ன அறிவிப்பு வருமோ என்ற பயத்துடன் நாளுக்கு நாள் பயனர்கள் பெரும் குழப்பத்துடன் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டிருக்கும் எக்ஸ் தளத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2,12627 இந்தியர்களின் கணக்குகள் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன. அதற்கான விளக்கமும் எக்ஸ் தளத்தில் இருந்து (X Website New Update) கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இனி பயனாளர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவிடவும், லைக், புக்மார்க் மற்றும் மற்றவர்களின் பதிவுகளுக்குப் பதிலளிக்கவும் கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு எக்ஸ் தளததின் பயனாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
எக்ஸ் (Elon Musk announces new Rules for X) தளத்தில் வலம் வரும் போலிக் கணக்குகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார். தற்போது இந்த நடவடிக்கை முதல் கட்டமாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய இரண்டு நாடுகளில் நடைமுறையில் உள்ளது. விரைவில் இந்த செயல்முறை உலகம் முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். இதனால் எக்ஸ் தளத்தின் பயனாளர்கள் (X Website New Rules) அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: X தளத்தில் இருந்து நீக்கப்பட்ட 2 லட்சம் இந்தியர்களின் கணக்கு… அதிர்ச்சியில் பயனர்கள்.. |