Homeசெய்திகள்எலான் மஸ்க் ஒரு நிமிடத்திற்கு எத்தனை லட்சம் சம்பாதிக்கிறார் தெரியுமா?

எலான் மஸ்க் ஒரு நிமிடத்திற்கு எத்தனை லட்சம் சம்பாதிக்கிறார் தெரியுமா?

உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒருவராக இருப்பவர் தான் எலான் மஸ்க். இவர் மிகப்பெரிய தொழிலதிபர் என்று நமக்கு தெரியும். மேலும் நாம் திரைப்படங்களில் பார்த்து இருப்போம் ஒரு நிமிடத்திற்கு பல லட்சங்கள் வருவாய் ஈட்டுவது போல காட்டியிருப்பர். இது பலரால் நம்ப முடியாததாக இருக்கும். ஆனால் ஆதுதான் உண்மை. உலக பணக்காரர்களில் ஒருவராக உள்ள எலான் மஸ்க் அவர்களில் ஒரு நிமிடத்திற்கான வருமானம் எவ்வளவு என்றால் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். இப்போது இப்பதிவில் இது குறித்துப்பார்க்கலாம்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற நிலையில் இருந்து கடந்த வருடம் சிறிய சரிவை கண்டார் எலான் மஸ்க். எனினும் அவரின் ஒவ்வொரு நிமிடமும் அவருடைய சொத்தின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் தகவல்களின் படி எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு (Elon Musk Net Worth) தற்போது வரை 198.9 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதனை வைத்து அவர் ஒரு நொடி (Elon Musk Salary Per Minute), ஒரு நிமிடம், ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று கணக்கிட்டால் அது நாம்மை மலைத்துபோக வைக்கிறது.

கடந்த ஆண்டு (2023) டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியின் கடந்த ஆண்டிற்கான மொத்த வருமானம் $3.6203 பில்லியன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி பார்த்தால் ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள் (Elon Musk Salary Per Month) என்ற கணக்கின்படி ஒரு வருடத்தில், 31,536,000 வினாடிகள் உள்ளன. இதன் படி கணக்கிட்டால் நிமிடத்திற்கு எலான் மஸ்க் $6,887 சம்பாதிக்கிரார். ஒரு மணி நேரத்திற்கு $413,220, ஒரு நாளைக்கு $9,917,280 மற்றும் வாரத்திற்கு $69,420,960 என்ற அளவில் எலான் மஸ்கின் வருமானம் இருக்கிறது.

இவர் பெரிய தொழிலதிபர் ஆவார். இவரின் வருவாய் ஆதாரங்களில் முதன்மையா இடத்தில் உள்ளது X சமூக ஊடகம் மேலும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான SpaceX, டெஸ்லா நிறுவனம், Starlink, The Boring Company, xAI மற்றும் Neuralink என பல வெற்றிகரமான தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் எலான் மஸ்க் சொந்தக்காரராக உள்ளார்.

Elon Musk Net Worth
இதையும் படியுங்கள்: புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பு..! ரஷ்ய அதிபர் முக்கிய அறிவிப்பு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular