உலகின் பெரும் பணக்காரராண எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவிற்கு வருவதாக இருந்த எலன் மஸ்க் பயணம் டெஸ்லா நிறுவனத்தின் வேலை கடமை காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பில்லியனர் தொழிலதிபர் சமூக வலைதளத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவிற்கு வருவதாக (Elon Musk India Visit) இருந்த இந்த பயணத்தில், இந்திய பிரதமர் மோடியை சந்திப்பது மற்றும் இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனம் கால் பதிப்பது போன்ற பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திட்டமிடப்பட்டு இருந்ததாக தகவல் வெளியானது.
எலன் மஸ்க் இந்திய பயணத்திற்கு ஆர்வம் காட்டி வந்ததாகவும், பிரதமர் மோடியை சந்திப்பதற்கான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இந்தியாவில் டொஸ்லா நிறுவனம் அமைப்பது குறித்த வியூகங்களை தூண்டியது.
கார் சந்தையில் உலகின் மூன்றாவது பெரிய சந்தையான இந்தியா, பல மின்சார வாகன நிறுவனங்களின் இலக்கு சந்தையாக இருந்து வருகிறது. இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் வருகை, இந்திய வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் துறை நிபுணர்களால் பெரிதும் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் பயணம், டெஸ்ட்லா நிறுவனத்தின் வேலை காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இருந்தபோதும் இது தற்காலிகமான தாமதம் என்று மட்டுமே எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்தாண்டு இறுதியில் எலன் மஸ்க் இந்தியா வர (Elon Musk India Varugai) வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Unfortunately, very heavy Tesla obligations require that the visit to India be delayed, but I do very much look forward to visiting later this year.
— Elon Musk (@elonmusk) April 20, 2024