Homeசினிமாஎன்ன சொல்ல போகிறாய்? காதலனின் காத்திருப்பின் வலி..!

என்ன சொல்ல போகிறாய்? காதலனின் காத்திருப்பின் வலி..!

தமிழ் சினிமாவில் இன்றளவும் சில படங்கள் மற்றும் பாடல்களை இன்றளவும் மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாத அளவிற்கு இருந்து வருகிறது. அந்த அளவிற்கு அந்த படங்களின் கதைகள் அல்லது பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் இருந்து நீக்க முடியாத அளவிற்கு இடம் பிடித்திருக்கும். அந்த வகையில் இன்றைய இளைஞர்கள் மத்தியிலும் நீங்காத இடம் பிடித்த பாடல் என்றால் அது அஜித் தபு மற்றும் நடிப்பில் வெளி வந்த என்ன சொல்ல போகிறாய் என்ற பாடல் வரிதான்.

தமிழ் சினிமாவில் இளைய ராஜாவிற்கு பிறகு தனக்கென தனி இடத்தை பிடித்த இசையமைப்பாளர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் இசையில் ஆரம்ப கால பாடல்கள் அனைத்துமே மனதிற்கு அவ்வளவு இதமாக இருக்கும். வைரமுத்து மற்றும் இசைப்புயல் இருவரும் இணைந்தாலே அந்த பாடல் மாபெரும் வெற்றி அடையும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பல பாடல்கள் தனித்துவமாக அமைந்து வெற்றி பெற்றுள்ளது.

என்ன சொல்ல போகிறாய்

அஜித் நடிப்பில் திரைக்கு வந்த படம் தான் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் (Kandukondain Kandukondain movie) திரைப்படம். இந்த படம் வெளிவந்து 24 அண்டுகளை கடந்தும் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளது என்றே தான் கூறவேண்டும். இந்த பாடலில் வரும் என்ன சொல்ல போகிறாய் பாடல் வரி காதலன் காதலியின் சம்மதத்திற்காக காத்திருக்கும் தவிப்பை உணர்வுப்பூர்வமாக நமக்கு இந்த பாடல் கொடுக்கும்.

இந்த பாடலின் முதல் வரியில் இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்.. என்ற வரியில் தொடங்கி என்ன சொல்ல போகிறாய் (Enna Solla Pogirai) என்று முடியும் வரிகள் வரை உணர்வுப்பூர்வமாக இருக்கும். இந்த வரியில் என் வாழ்க்கையில் காதலி இல்லை என்று சொல்ல ஒரு நொடி போதும். ஆனால் என் வாழ்க்கையில் நீ இல்லை என்று சொல்ல இந்த ஜென்மம் இல்லை, அடுத்த ஜென்மத்தில் கூட தாங்க முடியாது என்று காதலன் தவிப்பை அழுகாக கூறியிருப்பார்.

மெளனமா..? மெளனமா..?

அடுத்த வரிகளில் காதன் கேள்விக்கு கண்களின் பதிலென்ன மெளனமா.. மெளனமா என்ற வரி ஒருவரின் காதலை உணர்த்துவது அவரின் கண்கள் தான் அவ்வாறு இருக்கும் போது அவனின் காதலை கண்களால் கூறும் போது அந்த கண்களின் கேள்விக்கு காதலி பதில் கூறாமல் இருப்பது சரியா என கூறியிருப்பார்.

இது போல அந்த பாடலில் உள்ள கவிஞர் வைரமுத்துவின் அனைத்து அழகான வரிகளுக்கும் ஆழமான விளக்கங்கள் உள்ளன. அஜித் மற்றும் தபு இந்த பாடலில் அவர்களை காட்சிப்படுத்தும் விதமும் மிக அழகாக இருக்கும். இந்த பாடலுக்கு இசைப்புயலின் இசை தனிச்சிறப்பாக அமைந்தது என்றே தான் கூறவேண்டும். இன்றும் இந்த பாடலை பலரும் யூடியூப்பில் கேட்டு ரசித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு.. ஆணின் வலியை உணர்த்தும் அழகான வரிகள்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular