Homeசெய்திகள்இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. வங்கி கணக்கில் ரூ.1000/- வரவு..!

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. வங்கி கணக்கில் ரூ.1000/- வரவு..!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பில் அமைந்த உடன் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்துக்கொண்டிருந்தது. அந்த வகையில் மகளிருக்கு மாதம், மாதம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்து அதற்கான பணிகள் செயல்படுத்தப்பட்டு இல்லத்தரசிகளின் (Magalir Urimai Thogai) வங்கிக்கணக்கில் மாதம் மாதம் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது மக்களவை தேர்தலுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரசாரங்கள், தேர்தல் பணிகள் என்று தமிழகத்தில் மக்களவை தேர்தல் களைக்கட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000/- க்கு மேல் பணம் எடுத்து செல்ல அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்திருந்தார்.

வாகனச் சோதனைகளும் நடைபெற்று வந்தது. இந்த நடைமுறை தேர்தல் நாளான ஏப்ரல் 19-ம் தேதி வரை இருக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதனால் உரிய காரணங்கள் இல்லாமல் பணம் மாற்றம் செய்வது போன்ற செயல்கள் தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது என்ற தகவலும் கிடைத்தது.

இந்நிலையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளின் (Kalaignar Women Entitlement Scheme) வங்கி கணக்கில் மாதம், மாதம் செலுத்தப்படும் ரூ.1000 இந்த மாதம் செலுத்தப்படுமா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது. ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் உரிமைத் தொகை வழங்க எந்த தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் வழக்கம் போல மகளிருக்கு உரிமைத் தொகைக்கான (kalaignar magalir urimai thogai) வரவு அவரவர் வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டு அதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular