Homeசினிமாஎதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தினாரா ..!

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தினாரா ..!

பிரபலமான தமிழ் சீரியல்களில் ஒன்றாக உள்ள சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் பிரபல தொலைகாட்சியான சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. மேலும் இந்த சீரியலை பிடிக்காத இல்லத்தரசிகளே இருக்க முடியாது என்னும் அளவுக்கு பிரபலமாக உள்ள சீரியல் தான் இது.

இந்த சீரியலின் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம். மேலும் இந்த சீரியலின் கதாநாயகியாக ஜனனி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மதுமிதா (Ethirneechal Serial Actress Madhumitha) மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு நடிகை மதுமிதா சென்ற கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து சோழிங்கநல்லூர் மதுமிதா தனது காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து (Serial Actress Madhumitha Accident) ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவகுமார் என்பவர் பலத்த காயம் அடைந்தார். அதன் பிறகு அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து (Ethirneechal Serial Actress Accident) காரணமாக நடிகை மதுமிதா மீது பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், சிறு காயங்கள் ஏற்படுத்துதல் என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் காயமடைந்த ரவிக்குமார் வீடு திரும்பினார்.

இந்த விபத்தை மதுமிதா குடிபோதையில் செய்துள்ளார் என்று வதந்திகள் பரவியது. இது தகவல் குறித்து மதுமிதா (Serial Actress Madhumitha) விளக்கம் அளிக்கும படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, நான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி ஒரு போலீஸ்காரர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாகவும், இந்த விபத்தால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் உண்மை அல்ல என்று அவர் கூறினார். மேலும் எனக்கு மதுப்பழக்கம் கிடையாது என்றும் ஒரு சிறிய விபத்து நடந்தது உண்மைதான் என்றும் அவர் கூறினார். மேலும் அந்த போலீஸ் அதிகாரி தற்போது நலமுடன் இருக்கிறார். நானும் நலமாக இருக்கிறேன் என்று கூறி அவர் இந்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: பிரபல நடிகை டாப்ஸிக்கு திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular