Homeசெய்திகள்முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவிடம் திறப்பு..! தேதி அறிவிப்பு..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவிடம் திறப்பு..! தேதி அறிவிப்பு..!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பல வருடம் ஆட்சி புரிந்தவர் தான் கலைஞர் கருணாநிதி. அவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி வயது முதிர்வு மற்றும் சில உடல்நல பிரச்சனைகள் காரணமாக காலமானார். அதன் பிறகு கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது. அதன் பிறகு திமுக முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு சென்னை மெரீனாவில் நினைவிடம் (Karunanidhi Ninaividam) அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் இந்த முடிவு குறித்து பேசும் போது, கலைஞர் ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப்படங்களுடன் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பில் அவருக்கு நினைவிடம் (Karunanidhi memorial) அமைக்கப்படும் என்று கூறினார்.

அதன் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் பின்புறத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டும் பணிகள் தொடங்கியது. இந்த நினைவிடமானது கடந்த ஆகஸ்டு மாதம் 7-ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

Karunanidhi memorial

ஆனால் இவரது நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பேனா சிலை மற்றும் நினைவிடத்தின் பணிகள் முடிவடையாத காரணத்தால் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த நினைவிடம் திறப்பு விழா தேதி (Karunanidhi Ninaividam Thirappu Vizha Date) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் திறப்பு விழா (Karunanidhi memorial Inauguration) வரும் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: வங்கிக் கணக்கில் ரூ.6000 வரபோகுது..! ரெடியா இருங்க..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular