சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் டெல்லியை நோக்கி கோரிக்கை பேரணி நடத்தினர். அந்த சமயத்தில் அவர்கள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசப்பட்டது. மேலும் ரப்பர் புல்லட்களால் தாக்குவது, சாலையை மறித்து, கைது செய்வது என பல வன்முறைகளும் அறங்கேறியது.
விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் நாளை பிப்ரவரி 16-ம் தேதி பந்த் (strike) நடைபெறவுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக இதுபோன்ற வன்முறைகளை கண்டித்து நாடு முழுவதும் நாளை பாரத் பந்த் (Vivasayigal Velai Nirutham) அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொள்ள பல மாநிலங்களில் இருந்து மக்கள் டெல்லி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இந்த போராட்டமானதின் 2-வது நாள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் விவசாயிகளுக்கான ஆதரவு நாடு முழுவதும் பெருகி வருகிறது. இந்த வகையில் தான் நாளை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் பாரத் பந்த் நடத்த இருப்பதாக விவசாயிகள் அமைப்புகள் அறிவுறுத்தி வருகிறது.
இந்த போராட்டத்தின் காரணமாக சாலை போக்குவரத்து சேவைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது இதன் காரணமாக நிச்சயம் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் சிரமப்படுவர். இதன் காரணமாக நாளை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை (School Leave) விடப்படுமாக என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.பள்ளிகள் விடுமுறை குறித்த (School Holiday) தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. எனவே நாம் பொறத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: நாடு முழுவதும் நாளை பந்த்..! என்ன காரணம் தெரியுமா? |