இந்த நவீன உலகில் அனைத்தும் நவீன மயமாகி விட்டது. அதோடு சேர்ந்து இணையதளங்கள் மூலம் ஊழல்களும் தொடர்ந்து அதிகரித்துவிட்டது. இந்நிலையில் தான் தற்போது இதேபோன்ற ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
இந்த பக்கத்தினை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக தான் மாணவர்கள் மத்தியில் அதிக பிரபலமாக உள்ள முகநூல், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பள்ளிக்கல்வித்துறைக்கு என்று தனி பக்கங்கள் துவங்கப்பட்டது.
இந்த பக்கங்களில் மூலம் அரசின் புதிய நலத் திட்டங்கள் மற்றும் சாதனை புரிந்த மாணவ – மாணவிகளின் பேட்டிகள், நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான விவரங்கள் ஆகியவை பதிவிடப்பட்டுவந்தது. மேலும் இந்த பக்கங்களில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் வீடியோக்கள் போன்றவை நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் தற்போது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் பேஸ்புக் பக்கம் சில மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கல்வி சம்பந்தமான வீடியோக்கள் பதி விடப்பட்டு வந்த இந்த பக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் காட்சிகள், தனித்தனி வீடியோவாக இந்தி மொழியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது இந்த பக்கத்தை தொடர்ந்து பின்பற்றும் மாணவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் இந்த சம்பவம் குறித்து பேஸ்புக் நிர்வாகத்திடம் புகார அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: அடுத்த ஒரு வாரம் வெயில் எப்படி இருக்கும்..! வெளியான முக்கிய தகவல்..! |