வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான நடிகர் தான் விஜய் தேவர் கொண்டா. இவர் தொடக்கம் முதல் வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவருக்கும் உள்ள பெண் ரசிகர்கள் பற்றி செல்லவே தேவையில்லை. அவ்வளவு ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். ஆனால் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான சில படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாக அமையவில்லை. இந்நிலையில் தான் தற்போது இவர் நடிப்பில் ஃபேமிலி ஸ்டார் என்ற படம் வெளியாகியுள்ளது. இந்த படம் முதல் நாளில் செய்துள்ள வசூல் (Family Star Collection in Tamil) பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த புளூ ஸ்டார் படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் தேவரகொண்டா மற்றும் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜெகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தான் இந்த படம் கடந்த ஏப்ரல் 5ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி வருகிறது. Family Star Movie Collection குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்த Family Star படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்தாலும், வசூல் ரீதியாக முதல் நாளில் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். இந்த படத்தை இதற்கு முன்னர் வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படமான கீதா கோவிந்தம் படத்தின் இயக்குனருடன் தற்போது விஜய் தேவரகொண்டா இணைந்த காரணத்தால் இந்த ஃபேமிலி ஸ்டார் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதன் பலனாக இப்படம் முதல் நாளில் 5.75 கோடி ரூபாய் வசூல் செய்யதுள்ளது என்று தகவல் (Family Star Movie First Day Collection) வெளியாகியுள்ளது. மேலும் வரும் நாட்களில் இது (Family Star Movie Vasool) அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்படுகிறது.
இதையும் படியுங்கள்: பையா 2: இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட பையா படத்தின் இரண்டாம் பாகம்..! சூப்பர் அப்டேட்..! |