பிரபல நடிகை மற்றும் பஜாக நிர்வாகியாகவும் உள்ளவர் தான் நடிகை ஜெயலட்சுமி. ஆனால் கடந்த ஒரு வருடமாக இவர் மீது பல மோசடி புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த 2022-ம் ஆண்டு பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் நிர்வாகியுமான சினேகன் நடிகை ஜெயலட்சுமி (Actress Jayalakshmi)மீது மோசடி புகார் ஒன்றை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்திருந்தார்.
அந்த புகாரில் பாடலாசிரியர் சினேகன் கூறியதாவது, கடந்த 2015-ம் ஆண்டு முதல் நான், சினேகம் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறேன். மேலும் இந்த அறக்கட்டளையின் மூலம் தான் பலருக்கு உதவி வருகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தான் நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமியும் சினேகம் அறக்கட்டளை என்ற பெயரில் இணையதளம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் நன்கொடை கேட்டு பெற்றுள்ளார்.
இதன் அடிப்படையில் வருமான வரித்துறை நடத்திய சோதனையின் போது இந்த விவகாரம் தனக்கு தெரிய வந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இதன் காரணமாக தனது அறக்கட்டளைக்கு அவப்பெயர் வந்துவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகை ஜெயலட்சுமி பாடலாசிரியர் சினேகன் (Snehan) தன் மீது அவதூறு பரப்பி வருவதாக சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன் பிறகு இருவரையும் காவல் துறையினர் சமரசம் செய்து வைத்தனர். ஆனால் மீண்டும் பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலட்சுமி புகார் அளித்தார். இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது அதன் பிறகு சினேகன் மீண்டும் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது, இந்நிலையில் தான் தற்போது இந்த வழக்கின் காரணமாக (Actress Jayalakshmi And Snehan Case) நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரம் மாரடைப்பால் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகம்..! |