உலக பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் தான் முகேஷ் அம்பானி. இவருடைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் பேசப்பட்டது. இது போல இவர்களில் அனைத்து நடவடிக்கைகள் தொடர்ந்து பேசப்பட்டு தான் வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் வீட்டை பிரபல நடிகர் ஒருவர் வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு தொழிலதிபர் அம்பானியின் (Mukesh Ambani) மகள் இஷா அம்பானிக்கு தொழிலதிபர் ஆனந்த் பிராமல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
அதன் பிறகு கடந்த 2022 -ம் ஆண்டில் இவர்களுக்கு கிருஷ்ணா, ஆதித்யா என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தது. Isha Ambani தான் கர்ப்பமாக இருக்கும் போது அதிக நாட்கள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் தான் ஓய்வில் இருந்தார்.
அந்த சமயத்தில் அவருடைய தாயான நீடா அம்பானியும் (Nita Ambani) உடன் இருந்து கவனித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லாஸ் ஏஜ்சல்ஸ் வீடு மிகவும் புகழ்பெற்ற வீடாகும். மேலும் இந்த வீடானது மும்பையில் உள்ள அம்பானி குடும்பத்தின் வீடான ஆன்டிலியாவை விட எந்த விதத்திலும் குறைவாக இல்லை என்று தான் கூறவேண்டும்.
இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் வீடானது 38,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த வீட்டில் மொத்தம் 12 படுக்கையறைகள் மற்றும் 24 பாத்ரூம்கள் உள்ளன. அதுமட்டுமின்றி ஜிம், ஸ்பா, பேட்மிண்டன் கோர்ட் உள்ளிட்ட பல வசதிகள் இந்த வீட்டில் உள்ளது.
இந்நிலையில் தான் இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் (Isha Ambani La Angels House) வீட்டை ரூ.500 கோடி கொடுத்து பிரபல ஹாலிவுட் நடிகரான பென் அஃப்லெக்காக (Ben Affleck) அவரது காதலியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸ் (Jennifer Lopez) வாங்கியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: வில்லேஜ் குக்கிங் சேனலை பாராட்டிய பிரபல தெலுங்கு நடிகர்..! |