தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் பிரபலமான நடிகை தான் ரகுல் ப்ரீத் சிங். இவர் கன்னடத்தில் வெளியான கில்லி என்னும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். அதன் பிறகு தெலுங்கில் கெரட்டம் மற்றும் யுவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த 2012-ம் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவின் இவரது முதல் படம் அவருக்கு வெற்றி அளிக்கவில்லை. சில வருடங்களுக்கு பிறது தமிழில் முன்னணி நடிகராக உள்ள கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெற்றி அடைந்தது. மேலும் இப்படத்தில் இவரின் நடிப்பு பலருக்கும் பிடித்து இருந்தது. இந்நிலையில் தற்போது இவர் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக வளம் வருகிறார். தமிழில் இந்தியன் 2 மற்றும் அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் தான் இவர் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளில் அவரின் காதலர் பற்றி சமூக வளைதளங்களில் தகவலை வெளியிட்டார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான Jackky Bhagnani-யை காதலிப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் தான் தற்போது இவர்களின் திருமணம் (Rakul Preet Singh Marriage) வெகு விமர்கையாக நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் (Rakul Preet Singh Marriage Photos) சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: உயரிய விருது பெற்ற நடிகை நயன்தாரா..! யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க? |