தமிழ் நாட்டில் பிறந்து இருந்தாலும் பல துறைகளில் பல மாநிலங்களில் தமிழர்கள் பிரபலமாக உள்ளனர். அதிலும் திரைத்துறை என்றால் செல்லவே தேவையில்லை. தமிழகத்தை சேர்ந்த பலர் இதுவரை திரைதுறையில் நல்ல நிலையில் உள்ளனர் என்பது நாம் அறிந்த ஒன்றே. அந்த வரிசையில் தற்போது தஞ்சையை சேர்ந்த ஒருவர் பாலிவுட் திரையுலகை கலக்கி வருகிறார். இந்த தகவல் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டிற்கும் மும்பைக்கும் இடையே உள்ள தொலைவு மிகவும் அதிகமாக இருந்தாலும், இரண்டிற்கும் இடையில் பலமான பிணைப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். மராட்டிய மக்களுக்கு இணையாக, கடந்த காலங்களில் இருந்து மும்பையையும், அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் தமிழர்கள் ஆதிக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இந்த வகையில் தான் தமிழர்கள் பாலிவுட் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.
அதற்கு உதாரணமாக பலர் உள்ளனர். தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்கலான ஏ.ஆர் ரகுமான், நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட பலர் பாலிவுட்டில் களமிறங்கி அதில் வெற்றியையும் கண்டுள்ளனர். அந்த வரிசையில் தான் சமீப காலமாக பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் ஆர். பாலகிருஷ்ணன் (Bollywood Director Balki).
இவர் ரசிகர்களால் சுருக்கமாக பால்கி என்று அழைக்கப்படுகிறார். இவர் தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணம் பகுதியில் பிறந்துள்ளார் (Bollywood Director Balki Native). மேலும் இவர் கடந்த 1964-ம் ஆண்டு பிறந்துள்ளார். இவர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவில் தான் திரைப்படங்களுக்கு திரைக்கதைகள் எழுதி வந்துள்ளார்.
பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு பிரபல இந்தி நடிகரான அமிதாப் பச்சனை வைத்து சீனி கம் என்னும் படத்தை இயக்கினார். மேலும் இந்த படத்தின் மூலம் இவர் பாலிவுட்டிலும் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பால்கி ஷமிதாப், பேட்மேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். இந்த படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதுமட்டுமின்றி கடந்த 2019-ம் ஆண்டு இந்தியா முழுவதும் வெளியான மிஷன் மங்கள் என்னும் திரைப்படத்தின் கதையாசிரியர் பால்கி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: ஷங்கரின் மருமகன் உதவி இயக்குனரா? |